லியோ சாதனையை சல்லி சல்லியாக உடைத்த கூலி.. மாஸ் காட்டிய ரஜினி
ரஜினிகாந்தின் கூலி மற்றும் விஜயின் லியோ படங்கள் முதல் நாளில் பெற்ற வசூலில் எது அதிகம்? அதன் வசூல் விவரங்கள், இந்திய மற்றும் உலகளாவிய வருமானத்தை பார்க்கலாம்.

கூலி லியோ வசூல்
திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலேயே கூலி படம் வசூல் சாதனை படைத்துள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா தகவலின்படி, இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.65 கோடி நிகர வசூல் பதிவு செய்துள்ளதாகவும், இது தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே மிகப்பெரிய தொடக்கமாக மாறியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
கூலி முதல் நாள் வசூல்
இந்தியா டைம்ஸ் தகவல்படி, கூலி படம் ஹிட்டாக மாற வேண்டும் என்றால் உலகளாவிய அளவில் குறைந்தபட்சம் ரூ.600 கோடியை வசூலிக்க வேண்டும். வெளியான முதல் நாளிலேயே உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளை சேர்த்து ரூ.150 கோடியை கூலி கடந்திருக்கலாம் என்று சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இந்த வேகத்தில் படம் ஓடினால், லியோ, 2.0 போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் சாதனைகளையும் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி நடித்த வார் 2 படம், முதல் நாளில் ரூ.52.5 கோடி நிகர வசூல் பெற்றது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
ரஜினிகாந்த் படம் வசூல்
இது நல்ல தொடக்கம் என்றாலும், கூலிக்கு சமமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் நடித்த கூலி முதல் நாளில் இந்தியாவில் ரூ.65 கோடியையும், உலகளாவிய அளவில் சுமார் ரூ.150 கோடியையும் முதல் நாள் வசூலாக பெற்றுள்ளது. நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ.68 கோடி வசூல் செய்தது.
விஜயின் லியோ வசூல்
உலகளவில் ரூ.140-148 கோடி வரை வசூலித்து அன்றைய தினத்தில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஓப்பனிங் சாதனையாக இருந்தது. கூலி மற்றும் லியோவை ஒப்பிடும் போது லியோவை தாண்டி கூலி படம் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளது. அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.