49 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் பிரசாந்த்..! எப்போது கல்யாணம்? தந்தை கூறிய குட் நியூஸ்!
தமிழ் சினிமாவில், விஜய் - அஜித் போன்ற நடிகர்கள் ஆரம்ப காலத்தில் தடுமாறியபோது கூட, வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து, தனக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கிய பிரசாந்தின் முதல் திருமணம், விவாகரத்தில் முடிந்த நிலையில்... அவரது இரண்டாவது திருமணம் எப்போது? என்பது குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் அவரின் தந்தை தியாகராஜன்.
வாரிசு நடிகர்கள் சிலர் ஆரம்ப காலங்களில், ரசிகர்கள் மத்தியில் தங்களை நிலைநிறுத்தி கொள்ள தடுமாறுவது உண்டு. ஆனால், நடிகர் பிரசாந்த் முதல் படமான 'வைகை பொறந்தாச்சு',என்கிற படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீக்காத இடத்தை பிடித்து... இளம் ஹீரோவாக நிலைத்து நின்றார். 17 வயதிலேயே, தன்னுடைய அழகாலும், துறுதுறு நடிப்பாலும்... பல இளம் ரசிகைகள் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட பிரசாத்துக்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது.
மிக குறுகிய நாட்களிலேயே அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்படும் சாக்லேட் பாயாக வலம் வந்த பிரசாந்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அவரின் தந்தை தான். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக கலைஞரான இவர்... தன்னுடைய மகனுக்கு, பார்த்து பார்த்து, கதைகளை தேர்வு செய்து அதில் நடிக்க வைத்து, ஷார்ட் பீரியடில் முன்னணி நடிகராக மாற்றினார்.
இயக்குனர் பா.இரஞ்சித் நடத்தும் பி கே ரோசி திரைப்படவிழா 2023! இன்று அமோகமாக துவங்கியது!
அந்த வகையில் பிரசாந்த் நடிப்பில்வெளியான வண்ண வண்ண பூக்கள், ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், பார்த்தேன் ரசித்தேன், ஜீன்ஸ், திருடா திருடா, ஸ்டார், வின்னர் என1990 முதல் 2005 வரை அஜித் - விஜய்க்கு இணையான, ஹீரோவாக செம்ம டஃப் கொடுத்து வந்தார். குறிப்பாக இவரை மனதில் வைத்து, கதை எழுதிய பல இயக்குனர்களும் உள்ளனர் என்பது தனி சிறப்பு.
அறிமுகமானத்தில் இருந்து தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் வெற்றி கனியை மட்டுமே அதிகம் ருசித்து வந்த பிரசாந்த் தோல்விகளை சந்திக்க தொடங்கியது திருமணத்திற்கு பிறகுதான். நடிகர் பிரஷாந்துக்கும் - கிரஹலட்சுமி என்கிற பெண்ணுக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது. மூன்று ஆண்டுகள் மட்டுமே இவர்களது திருமண வாழ்க்கை நீடித்த நிலையில்... ஏற்கனவே திருமணமானதை மறைத்து அந்த பெண் பிரசாந்தை திருமணம் செய்து கொண்டதாக எழுந்த சர்ச்சை தான் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என்று கூறப்பட்டது.
அந்த வங்கியில், கடந்த 2008-ம் ஆண்டு இவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. திருமண முறிவால் ஏற்பட்ட... மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட, பிரசாந்த் சரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காததால், இவரது ஒட்டுமொத்த திரையுலக வாழ்க்கையே அடிவாங்கியது.
விவாகரத்துக்கு பின்னர் இவர் நடிப்பில் வெளியான, ஜாம்பவான், தகப்பன்சாமி, புலன் விசாரணை 2, சாகசம், ஜானி போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. அதே போல்... கடந்த 2019 ஆம் ஆண்டு வினய விதேய ராமா என்கிற படத்தில், ராம் சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார். மேலும் மிகப்பெரிய இடைவெளிக்கு பின்னர், ஹிந்தியில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவா இயக்கத்தில்... ஆயுஷ்மான் குரானா, தபு, மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் வெளியான 'அந்தாதூண்' படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார்.
நடிகை கஜோலின் மகளா இது? கடல் கன்னி போன்ற உடையில்... தூக்கலான கவர்ச்சியில் அம்மாவையே மிஞ்சிய நைசா!
இப்படத்தை நடிகர் பிரசாந்தின் தந்தை, தியாகராஜனே இயக்கி, தயாரித்துள்ளார். மிப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீசுக்காக தான் தற்போது பிரஷாந்த் கார்திக்கிருக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்ட நிலையில்... இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் பிரசாந்தின் இரண்டாவது திருமணம் குறித்து, அவரின் தந்தை தியாகராஜனிடம் கேள்வி எழுப்பிய போது... பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள, அந்தகன் திரைப்படம் வெளியானதும், அவரின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் பிரசாந்தின் திரையுலக வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி வைக்க கூடிய படமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த தகவல் பிரசாந்தின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஷங்கருக்கு போட்டியாக போட்டோ பதிவிட்டு.. இந்தியன் 2 படத்தின் மெர்சலான அப்டேட்டை வெளியிட்ட கமல்ஹாசன்