Asianet News TamilAsianet News Tamil

August 16 1947 Review: கௌதம் கார்த்திக் நடித்த 'ஆகஸ்ட் 16, 1947' திரைப்பட எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!

'பத்து தல' படத்தின் வெற்றிக்கு பின்னர்,  கௌதம் கார்த்திக் நடிப்பில் இந்த வாரம் வெளியாகியுள்ள திரைப்படம் ஆகஸ்ட் 16, 1947 திரைப்படம். இந்த படம் குறித்து ரசிகர்கள் கூறியுள்ள விமர்சனம் இதோ..
 

1917 August 16 movie twitter review here
Author
First Published Apr 7, 2023, 1:11 PM IST

கெளதம் கார்த்திக் மற்றும் ரேவதி ஷர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள, ஆகஸ்ட் 16, 1947 திரைப்படம், நம் நாடு சுதந்திரம் அடைந்த காலகட்டத்தை சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள, பீரியட் ட்ராமா. என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ள இந்த படத்தை, பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரியுள்ளார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ஆகஸ்ட் 16, 1947 திரைப்படம், இன்று (ஏப்ரல் 7, 2023) உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் மிக பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.

August 16 1947 Review: கௌதம் கார்த்திக் நடித்த 'ஆகஸ்ட் 16, 1947' திரைப்பட எப்படி இருக்கு?

இந்த படத்தின் பிரீமியர் காட்சி, நேற்றைய தினமே... திரைபிரபலன்கள், பத்திரிக்கையாளர்கள், மற்றும் சினிமா விமர்சகர்களுக்கு போட்டு காண்பிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களையே அவர்கள் கொடுத்து வந்தனர். இதை தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு ரசிகர்களுக்கான முதல் காட்சி போடப்பட்டது. படம் வெளியானதில் இருந்து ரசிகர்கள் தங்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை இப்படத்திற்கு தெரிவித்து வரும் நிலையில், ரசிகர்களின் விமர்சனம் குறித்த ட்விட்டர் கருத்துக்கள் இதோ..

விமர்சகர் ஒருவர் இப்படம் குறித்து கூறுகையி... '1947ஆகஸ்ட்16'- ஒரு முறை பார்க்கக்கூடிய கண்ணியமான பொழுதுபோக்கு திரைப்படம். அருமையான கதைக்களம் ஆனால் திரைக்கதை இன்னும் ஈர்க்கக்கூடியதாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. படத்தை இயக்கிய நேரத்திலும், பாடல்களிலும் சிறிய குறைபாடுகள் உள்ளதாகவே பார்க்கிறேன் மேக்கிங்கும், காட்சியமைப்பும் நன்றாக உள்ளது. கௌதம் கார்த்திக் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என கூறியுள்ளார்.
 

 

மற்றொரு ரசிகர், சுதந்திரத்திற்கான போராட்டத்தின் உணர்வுபூர்வமான கதை. திரையரங்குகளில் 1947AUGUST16 படத்தை தவறவிடாதீர்கள்.கூறியுள்ளார்.

 

இன்னொரு ரசிகர் வீடியோ ஒன்றை வெளியிட்டு... பிரபலங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நல்ல கருத்துக்களை 1947 AUGUST 16 படம் பெற்று வருகிறது. சொல்லப்படாத ரகசியம் கொண்ட சுவாரசியமான கதை களம் என தெரிவித்துள்ளார்.

நன்றி கெட்டவன் சூரி... சோறு போட்டதை கூட மறந்துட்டான்! வெளுத்தி வாங்கிய பிரபல நடிகர்..!

 

மற்றொரு ரசிகர்... 1947 ஆகஸ்ட் 16 - முற்றிலும் அதிசயம் நிறைந்த ஒரு படமாக பார்க்கிறேன். இது இயக்குனர் என்.எஸ்.பொன்குமாரின் முதல் படம் என்பதை நம்ப முடியவில்லை. கெளதம் கார்த்திக் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். விஜய் டிவி புகழிடம் நீங்கள் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை காணலாம். சீன் ரோல்டன் பி.ஜி.எம் அபாரம். அதே போல் ஏ.ஆர்.முருகதாஸின் தயாரிப்புகள் ஒருபோதும் கூஸ்பம்ப்ஸை கொடுக்கத் தவறியதில்லை. இப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்

 

தொடர்ந்து இப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மற்றொரு ரசிகர்... #1947AUGUST16 இன்டெர்வல் : மிகவும் ஈர்க்கக்கூடிய ஒன்றாக உள்ளது. முதல் பாதி அற்புதம், அது ஒரு சிறந்த தொடக்கத்தை பெற்று, வேகத்தை நன்றாக ஓட வைக்கிறது. எமோஷனலாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு உறுதியான நடிப்பை கெளதம் கார்த்திக் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவரை தரமான திரைக்கதையில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சீன் ரோல்டன் நல்ல இசையை கொடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios