நன்றி கெட்டவன் சூரி... சோறு போட்டதை கூட மறந்துட்டான்! வெளுத்தி வாங்கிய பிரபல நடிகர்..!
நடிகர் சூரி குறித்து பேட்டி ஒன்றில், மிகவும் மோசமாக விமர்சித்து பேசியுள்ளார் பிரபல நடிகர் போண்டா மணி.
bonda mani
இலங்கையில் இருந்து அகதியாக தமிழகத்திற்கு வந்து, நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் பல சினிமா கம்பெனிகளில் வாய்ப்பு தேடி அலைந்த போண்டா மணிக்கு... இயக்குனரும், நடிகருமான... கே.பாக்யராஜ், தான் இயக்கி நடித்த 'பவுனு பவுனுதான்' என்கிற படத்தில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார். இதுவே இவரின் அறிமுக படமாகவும் அமைந்தது.
bonda mani
இதை தொடர்ந்து, மணிக்குயில், பொன் விலங்கு, அவதார புருஷன், செல்வா, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, சுந்தரா ற்றவேல்ஸ், வின்னர், வேலாயுதம், ஜில்லா என சுமார் 150க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.
bonda mani
இந்நிலையில் கடந்த ஆண்டு, தன்னுடைய இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போண்டா மணி, தீவிர சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்தார். மேலும் தன்னுடைய சிகிச்சைக்கு பணம் தேவை என கண்ணீருடன், இவர் வெளியிட்ட வீடியோ வைரலாக பரவ, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களால்... மற்றும் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவியை போண்டா மணிக்கு செய்தனர்.
தற்போது உடல்நலம் தேறி, மீண்டும் படப்பிடிப்புகளில் பிஸியாகியுள்ள போண்டா மணி, அடுத்தடுத்து பல யூ டியூப் சேல்களுக்கு பேட்டிகள் கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட அஜித்துக்கு ஆரம்ப காலத்தில் நான் உதவியுள்ளேன். அவர் பலருக்கு உதவி செய்கிறார் என கேள்வி பட்டுள்ளேன். ஏனோ எனக்கு உடல் நிலை சரியில்லாத போது கூட உதவி செய்ய முன்வரவில்லை என கூறி இருந்தார்.
மேலும், தனக்கு உதவி செய்தவர்கள் யார் யார்... என கூறி லிஸ்டு போட்டு நன்றி தெரிவித்தார். இந்த பேட்டியில் நடிகர் சூரி குறித்து மிகவும் மோசமாக விமர்சித்து பேசியுள்ளார். அதாவது சூரி, தன்னுடைய சொந்த ஊரான மதுரையில் இருந்து வந்து, பட வாய்ப்புகள் தேடி அலைந்த போது, தன் வீட்டில் தங்க வைத்து... சாப்பாடு போட்டு கவனித்து கொண்டுள்ளார் போண்டா மணி.
நகைச்சுவை தொடர் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வாங்கி தந்ததோடு, தினக்கூலியாக சூரிக்கு 200 ரூபாய் சம்பளமாக கொடுத்தாராம். அப்படி இருக்கையில் தனக்கு உடல் நிலை சரி இல்லை என்கிற செய்தி வெளியானபோது, உதவி செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை. ஒரு போன் போட்டாவது விசாரித்திருக்கலாம். அன்னைக்கு சோறு போட்டதை கூட மறந்துட்டான், சூரி ஒரு நன்றி கெட்டவன் என வெளுத்து வாங்கியுள்ளார். இவரின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை பூர்ணாவுக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா? புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்!