நடிகை கஜோலின் மகளா இது? கடல் கன்னி போன்ற உடையில்... தூக்கலான கவர்ச்சியில் அம்மாவையே மிஞ்சிய நைசா!
பிரபல பாலிவுட் நடிகை கஜோலின் மகள் நைசா... இளம் நடிகைகளுக்கு நிகரான கவர்ச்சி உடையில், தன்னுடைய அம்மாவுடன் எடுத்து கொண்டுள்ள, லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல் தேவ்கன். மஹாராஷ்ட்ராவை சேர்ந்த இவர், ஹிந்தியில் 'பெகுடி' என்கிற படத்தின் மூலம் 1992 ஆம் ஆண்டு அறிமுகமானார். பின்னர் சல்மான் கான், ஷாருகான், சஞ்சய் தத், என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். திருமணம் ஆகி, சும்மா ஹீரோயின் போல் ஒரு மகள் இருக்கும் நிலையிலும் தொடர்ந்து திரையுலகில் தரமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
ஹிந்தியை தொடர்ந்து, தமிழிலும் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக 'மின்சார கனவு' படத்தில் நடித்திருந்தார். 1997 ஆம் ஆண்டு வெளியான இப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றாலும், ஹிந்தியில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தியதால், தமிழ் பட வாய்ப்புகளை ஏற்கவில்லை.
நன்றி கெட்டவன் சூரி... சோறு போட்டதை கூட மறந்துட்டான்! வெளுத்தி வாங்கிய பிரபல நடிகர்..!
இதையடுத்து தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த கஜோல், அடுத்தடுத்து ஹிந்தி பட வாய்ப்புகள் குவிந்ததால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின்னர், நடிகர் தனுஷை வைத்து... சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ’வேலையில்லா பட்டதாரி 2’ திரைப்படத்தில், போல்டன் பிஸ்னஸ் வுமனாக நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், மின்சார கனவு படத்தில் பார்த்தது போலவே கஜோல் இருக்கிறார் என்றும், அவரின் நடிப்பிற்கும் வாழ்த்துக்கள் குவிந்தது.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கஜோல், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய மகள் நைசா தேவ்கனுடன் எடுத்து கொண்ட, சில மாடர்ன் போட்டோசை பதிவிட இந்த புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகிறது.
மேலும் ரசிகர்கள் பலரும் 19 வயதிலேயே கஜோலின் மகள் நைசா, தூக்கலான கவர்ச்சியில், அழகில் அம்மாவையே மிஞ்சு விட்டதாக கூறி வருகிறார்கள். அதே போல் இப்படி புகைப்படம் வெளியிட்டுள்ளதால், அடுத்து காஜலின் மகளும் நடிகை அவதாரம் எடுக்கிறாரா? என சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.