MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஏன் நாங்க விஷ் பண்ணக் கூடாதா? தனுஷின் ஒரே ஒரு பதிவு: வெடித்துக் கிளம்பிய அரசியல் பூகம்பம்?

ஏன் நாங்க விஷ் பண்ணக் கூடாதா? தனுஷின் ஒரே ஒரு பதிவு: வெடித்துக் கிளம்பிய அரசியல் பூகம்பம்?

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாளையொட்டி தனுஷ் X பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விஜயின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாதது குறித்தும், பா.ஜ.க.வுடன் கூட்டணியை உணர்த்துகிறாரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 17 2026, 06:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
நடிகர்கள் நாடாள முடியுமா? கமல், விஜய் வரிசையில் தனுஷ்...
Image Credit : X

நடிகர்கள் நாடாள முடியுமா? கமல், விஜய் வரிசையில் தனுஷ்...

தமிழக அரசியல் வரலாற்றில் ‘நடிகர்கள் நாடாள முடியுமா?’ என்ற கேள்வி தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் ஒன்றாகும். இந்தக் கேள்விக்கு தேர்தல் களத்தில் நின்று வெற்றி கண்டு பதில் அளித்தவர்களாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜய் ஆகியோர் திகழ்கின்றனர். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரை உயர்ந்தார். அதேசமயம் சிவாஜி கணேசன், சரத்குமார், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்றவர்கள் கட்சியைத் தொடங்கி, பாதியிலேயே கலைத்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கினர். தமிழகத்தின் பெரும் ஆளுமையாகக் கருதப்படும் கமல்ஹாசனால் கூட இந்த அரசியல் களத்தில் வெற்றியை எட்ட முடியாமல் பின்னடைவையே சந்திக்க நேரிட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
வாழ்த்தா? அல்லது அரசியல் என்ட்ரிக்கான வெள்ளோட்டமா?
Image Credit : Asianet News

வாழ்த்தா? அல்லது அரசியல் என்ட்ரிக்கான வெள்ளோட்டமா?

இத்தகைய அரசியல் சூழலில், நடிகர் தனுஷும் அரசியலில் இணைய இருப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, அவரது பிறந்தநாள் விழா மேடையில் அவர் பேசிய கருத்துக்கள் இந்த யூகங்களுக்கு மேலும் வலு சேர்த்தன. இதையடுத்து, ‘முதலமைச்சர் விஜய்க்குப் போட்டியாக மற்றொரு நடிகரா?’, ‘தனுஷால் முதலமைச்சராக முடியுமா?’ என சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை நெட்டிசன்கள் முன்னெடுத்து வந்தனர்.

33
பிரதமர் மோடிக்கு தனுஷ் போட்ட ஒற்றைப் பதிவு... கொதிக்கும் நெட்டிசன்கள்!
Image Credit : x

பிரதமர் மோடிக்கு தனுஷ் போட்ட ஒற்றைப் பதிவு... கொதிக்கும் நெட்டிசன்கள்!

இந்நிலையில், பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் சூழலில், நடிகர் தனுஷும் தனது X தளத்தில் வாழ்த்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனுஷின் இந்த பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

‘முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளுக்கு வாழ்த்துப் பதிவு வெளியிட்டீர்களா?’ ‘பா.ஜ.க கூட்டணியில் இணையப்போவதைத்தான் மறைமுகமாகத் தெரிவிக்கிறீர்களா?’ முதல்முறையாக பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறீர்களே, இது என்ன புது வழக்கம்? அதேபோல், தனுஷ் பேசிய புகழ்பெற்ற வசன டெம்ப்ளேட்டை வைத்து, ‘ஏன் நாங்களெல்லாம் Birthday Wish பண்ணக் கூடாதா?’ என்று சில நெட்டிசன்கள் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம், ‘கடந்த 2020-ஆம் ஆண்டிலும் பிரதமர் மோடிக்கு தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்; இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை’ என்று தனுஷுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.ஒரேயொரு வாழ்த்துப் பதிவு மூலம் பலதரப்பட்ட விவாதங்களை தனுஷ் கிளப்பியுள்ள நிலையில், இது அவரது தீவிர அரசியல் பயணத்திற்கான அடுத்த கட்ட நகர்வா அல்லது வழக்கமான வாழ்த்து மட்டும்தானா என்பது வரும் காலங்களில்தான் தெரியவரும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
சினிமா
தனுஷ்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
நொடிப்பொழுதில் உயிர் தப்பிய ரஜினி, கமல், அஜித்: ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த 5 பதைபதைக்கும் விபத்துகள்!
Recommended image2
Hollywood Horror Movies: பார்க்க வேண்டிய 5 ஹாலிவுட் திகில் படங்கள்.!
Recommended image3
Bigg Boss : ஷமாவின் கேப்டன் பதவி பறிபோகிறதா? பிக் பாஸ் டெமாகிரசி ரூமில் நடந்த எதிர்பாரா ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
நொடிப்பொழுதில் உயிர் தப்பிய ரஜினி, கமல், அஜித்: ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த 5 பதைபதைக்கும் விபத்துகள்!
Recommended image2
விஜய் - அஜித் விலகியதால் அதிர்ஷ்ட காற்று: ஒரே ஆண்டில் ரூ.1,000 கோடி வசூல்? பாக்ஸ் ஆபீஸில் வரலாறு படைப்பாரா சூர்யா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved