MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கைவிட்ட நீதிமன்றம்... ஜனநாயகனுக்கு விழும் அடிமேல் அடி - சென்சார் போர்டின் அடுத்த மூவ் என்ன?

கைவிட்ட நீதிமன்றம்... ஜனநாயகனுக்கு விழும் அடிமேல் அடி - சென்சார் போர்டின் அடுத்த மூவ் என்ன?

ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கக்கோரிய வழக்கில் ஜனநாயகன் படக்குழுவுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளதால், அவர்களின் அடுத்தக்கட்ட நகர்வு பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 27 2026, 11:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jana Nayagan Movie Censor Case
Image Credit : X

Jana Nayagan Movie Censor Case

ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க காலதாமதம் செய்து வருவதாகவும் அதை உடனடியாக வழங்கக் கோரியும் ஜனவரி முதல் வாரத்தில் கேவிஎன் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஆஷா, உடனடியாக ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு இருந்தார். உடனடியாக தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஜனநாயகன் படத்துக்கு சிக்கல்
Image Credit : X

ஜனநாயகன் படத்துக்கு சிக்கல்

இந்த வழக்கு ஜனவரி 20-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று (ஜனவரி 27) தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்படி தணிக்கை வாரியத்துக்கு போதிய அவகாசம் வழங்காமல் தனி நீதிபதி ஆஷா தீர்ப்பு வழங்கியதாக குறிப்பிட்டு அவர் வழங்கிய தீர்ப்பினை ரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டதோடு, தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்ய அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை தனி நீதிபதி ஆஷாவே மீண்டும் விசாரிப்பார் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பால் ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

34
தீர்ப்பு என்ன?
Image Credit : KVN Productions

தீர்ப்பு என்ன?

மத அடையாளங்களை அவதூறு செய்வதை ஏற்க முடியாது என்றும் தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநயாகன் திரைப்படத்தை மறு ஆய்வுக் குழுவிற்கு அனுப்பாமல் தணிக்கை சான்றிதழ் தர தனி நீதிபதி உத்தரவிட்டிருப்பதாலும், தணிக்கை வாரியத்திடம் விளக்கம் பெறாமல் தனி நீதிபதி உத்தரவிட்டதாலும் அவர் முன்னதாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக தலைமை நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார். அதுமட்டுமின்றி இந்த வழக்கை முதலில் இருந்து விசாரிக்க தனி நீதிபதி அமர்வுக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

44
அடுத்தக்கட்ட நகர்வு என்ன?
Image Credit : KVN Productions

அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

ஜனநாயகன் படத்தை சென்சார் போர்டு மறு ஆய்வுக்கு அனுப்பினால் அதற்கான குழுவை அமைக்கவே இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகுமாம், அதனால் அந்த குழு அமைத்து, அதற்கான மறு ஆய்வு முடிவடைந்து படம் ரிலீஸ் ஆவது மிகவும் சிக்கலான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதற்குள் எலெக்‌ஷன் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், படத்தை தேர்தல் முடியும் வரை வெளியிட வாய்ப்பு இல்லை. இதனால் ஜனநாயகன் படம் கடும் சிக்கலில் சிக்கி உள்ளது. இதையடுத்து ஜனநாயகன் படக்குழு தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜன நாயகன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image2
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Recommended image3
Bigg Boss 10 : மெண்டல் என திட்டிய ஜேசன்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முனியம்மாள் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!
Related Stories
Recommended image1
விஜய்க்கு தொடரும் சிக்கல்.. ஜனநாயகன் படக்குழு vs சென்சார் போர்டு.. உயர்நீதிமன்றத்தில் அனல்பறந்த வாதம்!
Recommended image2
ஜனநாயகன் படத்துக்கு அடுத்த ஆப்பு... சென்சார் வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved