MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜனநாயகன் படத்துக்கு அடுத்த ஆப்பு... சென்சார் வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

ஜனநாயகன் படத்துக்கு அடுத்த ஆப்பு... சென்சார் வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தற்போது அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 27 2026, 10:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jana Nayagan Movie Censor Case Verdict
Image Credit : X

Jana Nayagan Movie Censor Case Verdict

நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். அப்படத்தோடு சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார் விஜய். எச்.வினோத் இயக்கியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய் உடன் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, கெளதம் மேனன், மதன் கெளரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இயக்குநர்கள் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோரும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஜனநாயகன் சென்சார் வழக்கு
Image Credit : X

ஜனநாயகன் சென்சார் வழக்கு

ஜனநாயகன் திரைப்படத்தை ஜனவரி 9-ந் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததாலும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாலும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு, படத்துக்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். அந்த உத்தரவு வந்த சில நிமிடங்களிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் சென்சார் போர்டு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

34
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Image Credit : instagram

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் கடந்த ஜனவரி 20-ந் தேதி நடைபெற்றது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து இருந்தார். இதனிடையே ஜனவரி 27-ந் தேதி ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஜனநாயகன் படத்திற்கு என்ன தீர்ப்பு கிடைக்கும் என்கிறா எதிர்பார்ப்பில் ரசிகர்களும், படக்குழுவினரும் இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு ஜனநாயகன் சென்சார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

44
தீர்ப்பு என்ன?
Image Credit : KVN Productions

தீர்ப்பு என்ன?

ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என்கிற தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதேபோல் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்வதற்கான அவகாசமும் வழங்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி ஜனநாயகன் திரைப்படத்தை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் நீடிக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜன நாயகன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Related Stories
Recommended image1
விஜய்க்கு தொடரும் சிக்கல்.. ஜனநாயகன் படக்குழு vs சென்சார் போர்டு.. உயர்நீதிமன்றத்தில் அனல்பறந்த வாதம்!
Recommended image2
Jananayagan: ஒரு படம்… பல பிரச்சனைகள்! ‘ஜனநாயகன்’ ஏன் இலக்காகிறது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved