MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vishnu Vishal : நான் ஒரு நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறேன்... 3 ஆண்டுகளாக மறைத்து வைத்த ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்

Vishnu Vishal : நான் ஒரு நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறேன்... 3 ஆண்டுகளாக மறைத்து வைத்த ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்

Vishnu Vishal Opens Up About His Health Issue : கட்டா குஸ்தி 2 படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக இருந்த விஷ்ணு விஷால், தான் ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் விஷயத்தை கூறி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 25 2026, 03:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vishnu Vishal Health Issue
Image Credit : our own

Vishnu Vishal Health Issue

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தொடர்ச்சியாக தேர்வு செய்து நடித்து வெற்றி கண்டு வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தற்போது கட்டா குஸ்தி 2 படம் தயாராகி உள்ளது. அப்படம் வருகிற ஜூலை 3ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில், அதன் புரமோஷன்களில் பிசியாக ஈடுபட்டு வந்த விஷ்ணு விஷால் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தான் Autoimmune நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி இருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சோர்வாக இருப்பது ஏன்?
Image Credit : our own

சோர்வாக இருப்பது ஏன்?

அதில் விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ளதாவது : முதலில், உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றி. சமீபத்திய என்னுடைய போஸ்ட் அனைத்திலும் நீங்கள் சொன்ன அத்தனை கமெண்ட்ஸ்களையும் நான் பார்த்தேன். அது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. அதனால் இந்த விஷயத்தை உங்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சமீப காலமாக என் முகம் சோர்வாக இருப்பது போல இருப்பதை பலர் கவனித்திருக்கிறீர்கள்.

Related Articles

Related image1
திருமணத்துக்கு முன்பே முதல் மனைவிக்கு கேன்சர் பாதிப்பு; விவாகரத்து பற்றி மனம்திறந்த விஷ்ணு விஷால்
Related image2
Lal Salaam : லால் சலாம் பிளாப் ஆனது ஏன்? புது குண்டை தூக்கிப் போட்ட விஷ்ணு விஷால்
34
நோய் பாதிப்பு
Image Credit : X

நோய் பாதிப்பு

அதற்குக் காரணம், கடந்த 3-4 ஆண்டுகளாக நான் ஒரு Autoimmune நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன். அதற்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை இடையிடையே எடுத்துக்கொண்டு வருகிறேன். அந்த மருந்துகளின் பக்கவிளைவு தான் அந்த சோர்வு ஆனால் தற்போது நான் மேற்கொண்டு வரும் இந்த சிகிச்சை என் உடல்நலத்திற்கு மிகவும் அவசியமானது. அதே சமயம், நீங்கள் காட்டும் அன்பும் ஆதரவும், நான் நம்பிக்கையுடன் செய்து வரும் வேலையும், மேலும் "கட்டா குஸ்தி 2" படத்திற்காக இரவு பகலாக உழைத்த ஒவ்வொருவரிடமும் எனக்குள்ள பொறுப்புணர்வும் என்னை தொடர்ந்து முன்னேறச் செய்கின்றன.

44
கட்டா குஸ்தி 2 மீது நம்பிக்கை
Image Credit : Instagram/@thevishnuvishal

கட்டா குஸ்தி 2 மீது நம்பிக்கை

அதனால்தான் உடல்நிலை சவால்கள் இருந்தபோதிலும், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். என் உடல்நிலை விரைவில் குணமாகிவிடும். நீங்கள் காட்டிய அக்கறை, என்னை இன்னும் சிறப்பாக என் உடல்நலத்தை கவனித்துக்கொள்ள ஊக்குவித்துள்ளது. ஒவ்வொரு கமெண்ட்ஸ் மற்றும் கருத்துக்கும், ஒவ்வொரு ஆதரவுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இப்போது கட்டாகுஸ்தி படத்தின் ப்ரோமோசன் வேலைகளில் இறுதிகட்ட பணிகளில் நாங்கள் இருக்கிறோம். மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறேன். வரும் ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் "கட்டா குஸ்தி 2" படத்தை நீங்கள் அனைவரும் கண்டுகளித்திட காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஷ்ணு விஷால்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajinikanth Movie Update : டிசம்பரில் ரிலீசாகும் சூப்பர்ஸ்டாரின் 'தர்மன்'! சென்னையில் சத்தமில்லாமல் தொடங்கிய படப்பிடிப்பு!
Recommended image2
குஷ்பூ மகள் திருமணம்... ஒட்டுமொத்த கோலிவுட்டும் Goa-ல தான் இருக்கு - வைரலாகும் போட்டோஸ்
Recommended image3
OTT : அமேசான் பிரைம் ஓடிடியில் இந்த வாரம் அதிக வியூஸை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இதோ
Related Stories
Recommended image1
திருமணத்துக்கு முன்பே முதல் மனைவிக்கு கேன்சர் பாதிப்பு; விவாகரத்து பற்றி மனம்திறந்த விஷ்ணு விஷால்
Recommended image2
Lal Salaam : லால் சலாம் பிளாப் ஆனது ஏன்? புது குண்டை தூக்கிப் போட்ட விஷ்ணு விஷால்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved