MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நாட்டையே நடுநடுங்க வைத்த நிஜ சீரியல் கில்லரின் கதை... OTT-யில் டிரெண்டாகும் சைக்கோ த்ரில்லர் படம்

நாட்டையே நடுநடுங்க வைத்த நிஜ சீரியல் கில்லரின் கதை... OTT-யில் டிரெண்டாகும் சைக்கோ த்ரில்லர் படம்

OTT-யில் பிரபலமாகி வரும் இந்த சைக்கோ த்ரில்லர் திரைப்படத்தைத் மிஸ் பண்ணாம பாருங்க. படம் முழுவதும் சுவாரஸ்யமாக இருக்கும். இதன் கதைக்களத்தை இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 25 2026, 05:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Must Watch Movie on OTT
Image Credit : moviebuff

Must Watch Movie on OTT

ஸ்பென்ஸ், ஹாரர், க்ரைம், த்ரில்லர் என விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட படங்களுக்கு ஓடிடி தளங்களில் தனி வரவேற்பு உள்ளது. குறிப்பாக உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகின்றன. அந்த வரிசையில், நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு சைக்கோ க்ரைம் த்ரில்லர் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

மும்பை நகரை 1960-களில் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் தொடர் கொலையாளி ராமன் ராகவின் பின்னணியை மையமாக வைத்து உருவான திரைப்படம்தான் ‘ராமன் ராகவ் 2.0’. சாலையில் அப்பாவி மக்களை இரும்புக் கம்பியால் தாக்கிக் கொல்லும் கொடூரமான கொலையாளிக்கும், போதைப்பழக்கத்தில் சிக்கியுள்ள காவல்துறை அதிகாரிக்கும் இடையிலான மனப்போராட்டமே படத்தின் முக்கியக் கதைக்களமாக அமைந்துள்ளது.

Theatre and OTT Releases : டாக்ஸிக் vs ஹாய்... இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஓடிடியில் இப்படி ஒரு படமா?
Image Credit : social media

ஓடிடியில் இப்படி ஒரு படமா?

கதையின் நாயகனாக இல்லாமல், ஒரு சைக்கோ கொலையாளியின் பாத்திரத்தை ஏற்று நவாசுதீன் சித்திக் தனது நடிப்பால் மிரட்டியுள்ளார். கதாபாத்திரத்தின் மனநிலையையும் அதன் வன்முறையான தன்மையையும் அவர் வெளிப்படுத்திய விதம் படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் நடிகராகவும் அறியப்படும் அனுராக் காஷ்யப். காவல்துறை அதிகாரி ராகவனாக விக்கி கௌஷல் நடித்துள்ளார். போதைப்பழக்கத்துடன் போராடும் அதே நேரத்தில், தனது மனதுக்குள் இருக்கும் வன்முறையையும் எதிர்கொள்ளும் போலீஸ் அதிகாரியாக விக்கி கௌஷல் வித்தியாசமான நடிப்பை வழங்கியுள்ளார்.

OTT Crime Thriller : ஓடிடியில் செம ஒர்த்தான தமிழ் படம்... இந்த வீக்கெண்ட் மிஸ் பண்ணாம பாருங்க!

Related Articles

Related image1
OTT : ரியல் சீரியல் கில்லரின் கதை... ஓடிடியில் ஒளிந்திருக்கும் தரமான தமிழ் படம் - மிஸ் பண்ணாம பாருங்க
Related image2
OTT-யில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய திகில் ஃபேண்டஸி படம்... மர்ம விண்கல் விழுந்த கிராமத்தின் அமானுஷ்ய கதை..!
34
படத்தின் ஹைலைட் என்ன?
Image Credit : our own

படத்தின் ஹைலைட் என்ன?

திரைப்படத்தின் திரைக்கதை அடுத்தடுத்து வரும் திருப்பங்களுடன் நகர்வதால், ஆரம்பம் முதல் இறுதிவரை பார்வையாளர்களின் கவனத்தை தக்க வைத்துக்கொள்கிறது. சில காட்சிகள் அதிர்ச்சியையும் திகிலையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக கொலையாளி மற்றும் போலீஸ் அதிகாரிக்கு இடையேயான உளவியல் மோதல் படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை அளிக்கிறது.

சோபிதா துலிபாலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம், க்ரைம் மற்றும் சைக்கோ த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கக்கூடியதாக உள்ளது. படத்திற்கு ஐஎம்டிபி-யிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

OTT-யில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய திகில் ஃபேண்டஸி படம்... மர்ம விண்கல் விழுந்த கிராமத்தின் அமானுஷ்ய கதை..!

44
எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
Image Credit : social media

எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த திரைப்படத்தை பார்க்க முடிகிறது. வழக்கமான க்ரைம் கதைகளைத் தாண்டி, கொலையாளியின் உளவியல் மற்றும் போலீஸ் அதிகாரியின் இருண்ட பக்கத்தை மையமாகக் கொண்ட ஒரு த்ரில்லரை தேடுபவர்களுக்கு ‘ராமன் ராகவ் 2.0’ நல்ல தேர்வாக இருக்கலாம்.

OTT : ரியல் சீரியல் கில்லரின் கதை... ஓடிடியில் ஒளிந்திருக்கும் தரமான தமிழ் படம் - மிஸ் பண்ணாம பாருங்க

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss Common Man : பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் முனியம்மாவுக்கு செக் வைத்த டீம்! ஷாப்பிங் டாஸ்க்கில் வெடித்த சர்ச்சை
Recommended image2
Theatre and OTT Releases : டாக்ஸிக் vs ஹாய்... இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங்
Recommended image3
KudikaraNenju: துருவ் விக்ரம் குரலில் ‘குடிகார நெஞ்சு’.. ‘ஹாய்’ படத்திற்கு ஏறும் ஹைப்
Related Stories
Recommended image1
OTT : ரியல் சீரியல் கில்லரின் கதை... ஓடிடியில் ஒளிந்திருக்கும் தரமான தமிழ் படம் - மிஸ் பண்ணாம பாருங்க
Recommended image2
OTT-யில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய திகில் ஃபேண்டஸி படம்... மர்ம விண்கல் விழுந்த கிராமத்தின் அமானுஷ்ய கதை..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved