சண்டியர் முதல் காவல்காரன் வரை... டைட்டில் பிரச்சனையில் சிக்கி படாதபாடு பட்ட தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ
டைட்டிலால் பிரச்சனையை சந்தித்து பின்னர் வேறு வழியின்று தலைப்பை மாற்றி ரிலீஸ் செய்யப்பட்ட தமிழ் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சண்டியர் - விருமாண்டி
கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான விருமாண்டி திரைப்படத்திற்கு முதலில் சண்டியர் என பெயரிடப்பட்டு இருந்தது. சண்டியர் என்கிற தலைப்புக்கு எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக அப்படம் விருமாண்டி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது.
காவல்காரன் - காவலன்
மலையாளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பாடிகார்ட் திரைப்படம் தான் தமிழில் காவலன் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. விஜய் நாயகனாக நடித்திருந்த இப்படத்திற்கு காவல்காரன் என முதலில் பெயரிட இருந்தனர். ஆனால் அது எம்.ஜி.ஆர். நடித்த படம் என்பதாலும், அதனை பயன்படுத்த அனுமதி கிடைக்காத காரணத்தால் காவலன் என்கிற பெயரில் ரிலீஸ் ஆனது.
காட்ஃபாதர் - வரலாறு
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் அஜித் மூன்று வேடங்களில் நடித்திருந்த திரைப்படம் தான் வரலாறு. இப்படத்திற்கு முதலில் காட்ஃபாதர் என பெயரிட்டு இருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் தமிழ் படங்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக அப்படத்தின் தலைப்பை வரலாறு என மாற்றினர்.
எங்க வீட்டு பிள்ளை - நம்ம வீட்டு பிள்ளை
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்தியன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் தான் நம்ம வீட்டு பிள்ளை. இப்படத்திற்கு முதலில் எங்க வீட்டு பிள்ளை என பெயரிட இருந்தனர். ஆனால் அதே பெயரில் எம்.ஜி.ஆர். படம் ஒன்று உள்ளதால், அதற்கான அனுமதி கிடைக்காததால் நம்ம வீட்டு பிள்ளை என மாற்றினர்.
இதையும் படியுங்கள்... மாடர்ன் குந்தவையாக மாறிய சிவாங்கி... ‘உயிர் உங்களுடையது தேவி’ என உருகும் ரசிகர்கள்
அநீதி கதைகள் - சூப்பர் டீலக்ஸ்
விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து, அதற்காக தேசிய விருதும் வாங்கிய திரைப்படம் தான் சூப்பர் டீலக்ஸ், இப்படத்திற்கு முதலில் அநீதி கதைகள் என பெயரிட்டிருந்தார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, ஆனால் சில காரணங்களால் அந்த தலைப்புக்கு பதிலாக சூப்பர் டீலக்ஸ் என பெயர் மாற்றப்பட்டு ரிலீஸ் ஆனது அப்படம்.
தெய்வத் திருமகன் - தெய்வத் திருமகள்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, அமலாபால் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் தான் தெய்வத்திருமகள். இப்படத்திற்கு முதலில் தெய்வத்திருமகன் என பெயரிட்டு இருந்தனர். அந்த தலைப்புக்கு எதிர்ப்பு வந்ததன் காரணமாக அதனை தெய்வத் திருமகள் என மாற்றினர்.
பெப்சி (Pepsi) - உள்ளம் கேட்குமே
ஷியாம், அசின், பூஜா, லைலா, ஆர்யா நடிப்பில் வெளியான உள்ளம் கேட்குமே படத்திற்கு முதலில் பெப்சி என பெயரிடப்பட்டு இருந்தது. அப்படத்தில் இடம்பெறும் 5 நண்பர்களின் கதாபாத்திர பெயர்களின் முதல் எழுத்தை ஒன்றிணைத்து PEPSI என பெயரிட்டனர். பின்னர் அந்த பெயருக்கு அனுமதி கிடைக்காததால் உள்ளம் கேட்குமே என மாற்றிவிட்டனர்.
இதையும் படியுங்கள்... மாடலிங் துறையின் கருப்பு பக்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ‘இராக்கதன்’!