வெற்றிகரமாக 100 நாள் ஓடி சாதனை செய்த 'விக்ரம்'..! வசூல் மட்டும் இத்தனை கோடியா..? செம்ம ஹாப்பி மூடில் கமல்ஹாசன்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், வெளியான 'விக்ரம்' திரைப்படம், வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்த நிலையில், இந்த படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன் செம்ம ஹாப்பி மூடில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர் வெற்றி படங்களை இயக்கி வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் 'விக்ரம்'. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூர்யா வில்லனாக நடித்திருந்தனர். மேலும் காளிதாஸ் ஜெயராம், மைனா, பகத் பாசில், காயத்ரி, ஷிவானி, செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர்.
vikram movie
உலக நாயகன் கமல்ஹாசன் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'விக்ரம்' உலகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் திரையரங்குகளில், வெளியானது. வெளியான நாள் முதலே இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், தற்போதும் சில திரையரங்குகளில் இப்படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
மேலும் செய்திகள்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் பாரதி ராஜா! எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே? வைரலாகும் புகைப்படம்!
பல கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் சில படங்கள் 1 வாரம் கூட திரையரங்கில் ஓடுவது பெரிய விஷயமாக இருக்கும் நிலையில், 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள தகவலை படக்குழுவினர் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள்.
vikram movie
யாரும் எதிர்பாராத நேரத்தில் இப்படத்தில் வைக்கப்பட்டிருந்த ட்விஸ்ட் மற்றும் சஸ்பென்ஸ் தான். அதிலும் ஏஜென்ட் டீனாவின் ஆக்ஷன் காட்சிகள் வேற லெவலில் இருந்தது என கூறலாம். இதுவே இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் மற்றும் மகேஷ் பாபு நடிக்க இருந்த கதாபாத்திரம் எது தெரியுமா?
120 கோடி முதல் 140 கோடி வரை செலவில் எடுக்கப்பட்டு, பாக்ஸ் ஆபிஸில் மூன்று மடங்கு வசூல் சாதனை செய்துள்ள இந்த படம் 75 நாட்களை கடந்த போதே சுமார் 500 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது 100 நாட்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதால் 550 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் என திரைப்பட வட்டாரங்கள் கூறிவருகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
'விக்ரம்' படத்தின் மூலம் சிறந்த நடிகராக மட்டும் இன்றி, வெற்றிகரமான தயாரிப்பாளராகும் லாபம் அடைந்துள்ள கமல்ஹாசன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: உதயநிதி மற்றும் 'மாமன்னன்' பட குழுவுக்கு விருந்து வைத்து... ஓணம் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்..! வைரல் கிளிக்ஸ்!