MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் மற்றும் மகேஷ் பாபு நடிக்க இருந்த கதாபாத்திரம் எது தெரியுமா?

பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் மற்றும் மகேஷ் பாபு நடிக்க இருந்த கதாபாத்திரம் எது தெரியுமா?

பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தில், விஜய் மற்றும் மகேஷ் பாபு ஆகியோர் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தனர் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது . 

2 Min read
Author : manimegalai a
Published : Sep 09 2022, 05:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

கல்கி எழுதிய வரலாற்று சிறப்புக்கள் கொண்ட நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்க எம்.ஜி.ஆர், உலக நாயகன் கமல்ஹாசன் முதல்கொண்டு சிலர் முயற்சி செய்த நிலையில்... ஒரு சில காரணங்களால் அது நிறைவேறாமலே போனது. இந்த கதையை படமாக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு, சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் படமாக இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
 

26

சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக கடின உழைப்பை செலுத்தி, அனைத்து, நடிகர், நடிகைகளின் ஒத்துழைப்பாலும், பல சினிமா தொழிலாளர்களின் உழைப்பாலும் தான் இன்று, இந்த படம் இரண்டு பாகங்களாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: உதயநிதி மற்றும் 'மாமன்னன்' பட குழுவுக்கு விருந்து வைத்து... ஓணம் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்..! வைரல் கிளிக்ஸ்!
 

36

தமிழக மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், உருவாகி உள்ள இந்த படத்தில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி,விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரபு, பார்த்திபன், முதல்கொண்டு பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இவர்கள் அனைவருமே இந்த ஒரு படத்திற்காக பல படங்களின் வாய்ப்புகளை தவறவிட்டுள்ளனர்.
 

46

மேலும் இதில் நடிக்க கமிட் ஆன பல நடிகர்கள், படம்பிடிக்க துவங்க தாமதம் ஆனதாலும், பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க அதிக நாட்கள் கால்ஷீட் ஒதுக்க வேண்டி இருந்ததாலும் படத்தில் இருந்து விலகினர். 

மேலும் செய்திகள்: அப்பா கமல்ஹாசன் சேர்ந்து... அசத்தல் போட்டோ ஷூட் நடத்திய அக்ஷரா ஹாசன்! வைரலாகும் வேற லெவல் போட்டோஸ்!
 

56

அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க சம்மதித்து, பின்னர் வெளியேறுவர்கள் தான் தளபதி விஜய் மற்றும் மகேஷ் பாபு. இவர்கள் இருவரும் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தனர் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

66

இதுகுறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தற்போது அளித்து இருக்கும் பேட்டியில், பொன்னியின் செல்வன் படத்தில் தளபதி விஜய் வந்தியத்தேவன் ரோலிலும், மகேஷ் பாபு அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்திலும் நடிக்க இருந்ததாக கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்தது இந்த சீரியல் நடிகையா?
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
திரிஷா
ஐஸ்வர்யா ராய்
ஜெயம் ரவி
கார்த்தி (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
போட்டோவால் வெடித்த போராட்டம்... சாட்டையை சுழற்றும் காந்தாரா நாயகிக்கு குவியும் ஆதரவு
Recommended image2
விஜயாவுக்கு ரெய்டு விட்ட ஸ்ருதி... முடிவை மாற்றினாரா மீனா? சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
Recommended image3
கார்த்திக்கிற்கு 'மரண ஸ்கெட்ச்' போட்ட சந்திரகலா! போலீசில் சிக்கிய ரேவதி - கார்த்திகை தீபம் சீரியலில் அதிரடி திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved