அப்பா கமல்ஹாசன் சேர்ந்து... அசத்தல் போட்டோ ஷூட் நடத்திய அக்ஷரா ஹாசன்! வைரலாகும் வேற லெவல் போட்டோஸ்!
நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய மகள் அக்ஷரா ஹாசனுடன் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை அவரது மகள் வெளியிட ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நீண்ட காலமாக ஒரு வெற்றி படத்தை கொடுக்க போராடி வந்த கமல்ஹாசனுக்கு, சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான, 'விக்ரம்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது.
இந்த படத்தில் நடித்துள்ளது மட்டும் இன்றி இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்திருந்த நிலையில், பல கோடி ரூபாய் லாபம் ஈட்டி கொடுத்துள்ளது. எனவே மீண்டும் ஃபாமுக்கு வந்துள்ள கலஹாசன், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தை தொடர்ந்து அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்களின் கதைகளையும் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்தது இந்த சீரியல் நடிகையா?
இதை தவிர, அடுத்தடுத்து 4 படங்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் விஜய் டிவியில் துவங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பங்கேற்க தயாராகி வருகிறார். கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு கமல் நடித்த பிக்பாஸ் ப்ரோமோ ஒன்று வெளியாகி, விரைவில் பிக்பாஸ் சீசன் 6 துவங்க உள்ளது உறுதியானது.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ஆகியவற்றில் பரபரப்பாக செயல்பட்டு வரும், கமல்ஹாசன் சமீபத்தில் நடந்த விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் படவிழாவின் போது தன்னுடைய மகள் அக்ஷராஹாசனுடன் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை அக்ஷரா வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: எனக்கு அந்த பெண் மகளே இல்லை! அவன் மகா மட்டமானவன்.. பல வருட ரகசியத்தை உடைத்த ராஜ்கிரண்! வெளியான பகீர் அறிக்கை!
அப்பா மகள் இருவருமே செம்ம ஸ்டைலிஷ், மற்றும் ட்ரடிஷனல் லுக்கில் இந்த புகைப்படங்களில் உள்ளனர். இவர்களின் இந்த அசத்தல் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: கீர்த்திசுரேஷ், சாய் பல்லவி, மோகன்லால், மீரா ஜாஸ்மின் ஆகிய 20 பிரபலங்களின் ஓணம் பண்டிகை செலெப்ரேஷன் போட்டோஸ்.!