- Home
- Cinema
- உதயநிதி மற்றும் 'மாமன்னன்' பட குழுவுக்கு விருந்து வைத்து... ஓணம் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்..! வைரல் கிளிக்ஸ்!
உதயநிதி மற்றும் 'மாமன்னன்' பட குழுவுக்கு விருந்து வைத்து... ஓணம் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்..! வைரல் கிளிக்ஸ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த வருட ஓணம் பண்டிகையை, 'மாமன்னன்' படக்குழுவினருக்கு விருந்து வைத்து கொண்டாடியுள்ளார் இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் நாட்டில் பிறந்தவராக இருந்தாலும், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். நேற்று மிக விமர்சியாக கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகையை, கீர்த்தி சுரேஷ் குடும்பத்துடன் கொண்டாடாமல், படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்த 'அண்ணாத்த' மற்றும் செல்வராகவனுடன் நடித்த 'சாணி காகிதம்' ஆகிய படங்கள் வெளியானது. இதை தொடர்ந்து தமிழில் நடிகர் உதயநிதிக்கு ஜோடியாக 'மாமன்னன்' படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: அப்பா கமல்ஹாசன் சேர்ந்து... அசத்தல் போட்டோ ஷூட் நடத்திய அக்ஷரா ஹாசன்! வைரலாகும் வேற லெவல் போட்டோஸ்!
இந்த படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இவர், தன்னுடைய முதல் இரண்டு படங்களிலேயே தமிழ் திரையுலக ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.
இவர் தற்போது இயக்கி வரும் மாமனிதன் படத்தில், நடிகர் உதயநிதி ஹீரோவாக நடிக்கிறார். வைகை புயல் வடிவேலு மீண்டும் காமெடி நடிகராக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்தது இந்த சீரியல் நடிகையா?
விறுவிறுப்பாக இந்த படத்தின் பணிகள் நடந்து வரும் நிலையில், கீர்த்தி சுரேஷ் இந்த வருட ஓணம் பண்டிகையை படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
குறிப்பாக, நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலருக்கு விருந்து கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை அவரே சமூக வலைத்தளத்தில் வெளியிட பலர் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: கீர்த்திசுரேஷ், சாய் பல்லவி, மோகன்லால், மீரா ஜாஸ்மின் ஆகிய 20 பிரபலங்களின் ஓணம் பண்டிகை செலெப்ரேஷன் போட்டோஸ்.!
கீர்த்தி சுரேஷ் கைவசம் தற்போது ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே உள்ளது. இது போக... தெலுங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நானி நடிப்பில் உருவாகி வரும் தசரா படத்தில் கதாநாயகியாகவும், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான 'வேதாளம்' படத்தின் ரீமேக்காக, சிரஞ்சீவி நடித்து வரும் 'போலா ஷங்கர்' படத்தில் அவருக்கு தங்கை வேடத்திலும் நடித்து வருகிறார்.