- Home
- Cinema
- விஜய் சேதுபதியை அடிக்க வேண்டாமுன்னு சொல்லுங்க.. அப்பாவிடம் கதறி அழுத 'சூப்பர் சிங்கர்' பிரபலம்!
விஜய் சேதுபதியை அடிக்க வேண்டாமுன்னு சொல்லுங்க.. அப்பாவிடம் கதறி அழுத 'சூப்பர் சிங்கர்' பிரபலம்!
தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருக்கும் போது... விஜய் சேதுபதி அடி வாங்கிய காட்சியை பார்த்து, கதறி அழுததாக சூப்பர் சிங்கர் பிரபலம் ஒருவர் கூறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளம் திறமையாளர்கள் திறமைகளை வெளிக்கொண்டுவரும் இடமாக உள்ளது விஜய் டிவி. குறிப்பாக விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சீனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் இன்று பின்னணி பாடகர்களாக உள்ளனர் என்பது நாம் அறிந்ததே.
அந்த வகையில் கடந்த 2021 ஆண்டு நடந்து முடிந்த, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று தன்னுடைய இனிமையான குரல் வளத்தால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் சென்னையை சேர்ந்த மானஸ்வி .
மேலும் செய்திகள்: ஓசி திருமணத்தால் பிரச்சனையில் சிக்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்..! ஆப்பு வைத்ததா நெட்பிளிக்ஸ்?
சிறிய வயதில் இருந்தே, நடனம் மற்றும் இசை கற்று வந்த இவர்... பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரிசுகளை தட்டி சென்றவர்.
அதே போல் பரதநாட்டியம் ஆடுவதிலும் படு சுட்டி. பார்ப்பதற்கு மிகவும் அமைதியான பெண்ணாகவும், சென்சிட்டிவான பெண்ணாகவும் இவர் இருந்தாலும், போட்டி என்று விட்டால் புலியாக மாறிவிடுவார்.
மேலும் செய்திகள்: கட்டி பிடித்து ஒரே கொஞ்சல்ஸ்... ஷூட்டிங் இல்லாததால் அட்ராசிட்டி பண்ணும் அமலா பால்! ஆச்சர்யப்படும் ரசிகர்கள்!
அந்த வகையில் 2017ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குயில் தோப்பு என்ற பாடல் நிகழ்ச்சில் பங்கு பெற்று, அந்த போட்டியில் ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வென்றார் மானஸ்வி.
சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் மானஸிக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, பிரபாஸ்.. முக்கிய பிரபலங்களின் ஆதார் மற்றும் பாஸ்போட் போடோஸை பார்த்திருக்கீங்களா?
இந்நிலையில் இவர் திரையரங்கில் கதறி அழுதது குறித்து கூறியுள்ள தகவல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதி - நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தை மானஸ்வி தன்னுடைய தந்தையுடன் திரையரங்கம் சென்று பார்த்துள்ளார்.
அப்போது விஜய் சேதுபதி இறக்கும் சீனில், அவரை அடிப்பதை பார்த்து... அப்பா, விஜய் சேதுபதியை அடிப்பதை நிறுத்த சொல்லுங்கள், அவரை அடிக்க வேண்டாம் என தன்னையும் மீறி... அழுதுள்ளார். இதனால் திரையரங்கில் இருந்த பலர் இவரையே பார்த்துள்ளனர்.
இந்த தகவலை வெளியிட்டு அந்த நாளை மட்டும் என்னுடைய வாழ்க்கையில் மறக்கவே முடியாது என கூறியுள்ளார் சூப்பர் சிங்கர் பிரபலமான மானஸ்வி .