கட்டி பிடித்து ஒரே கொஞ்சல்ஸ்... ஷூட்டிங் இல்லாததால் அட்ராசிட்டி பண்ணும் அமலா பால்! ஆச்சர்யப்படும் ரசிகர்கள்!
நடிகை அமலா பால் தன்னுடைய ஓய்வு நாட்களை வித்தியாசமாக கழிக்கும் புதிய புகைப்படங்கள் வெளியாகி, ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
நடிகை அமலா பால்... வித்தியாசமான இடங்களுக்கு சென்று புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது, செம்ம கியூட்டாக வெளியிட்ட புகைப்படங்கள் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
விவாகரத்துக்கு பின்னர் சுதந்திர பறவையாக ஊர் சுற்றி வரும் அமலா பால், தொடர்ந்து வித்தியாசமான கதை களம் கொண்ட படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: கிழிந்து தொங்கும் குட்டை பாவாடையில்... கையில் பூவோடு குலுங்க குலுங்க கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் லாஸ்லியா!
இப்படி பார்த்து... பார்த்து... கதை தேர்வு செய்து நடித்தாலும், அந்த படங்களில் இவரது கதாபாத்திரம் முதல் கதை வரை நல்ல விமர்சனங்களை பெற்றாலும், ஏனோ பாக்ஸ் ஆபிசில் தோல்வியை தழுவி விடுகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில், கடைசியாக 2019 ஆம் ஆண்டு... ஆடை படம் வெளியானது. இதை தொடர்ந்து இவர் நடித்த குட்டி ஸ்டோரி என்கிற அந்தாலஜி திரைப்படம் வெளியானது.
மேலும் செய்திகள்: நயன்தாரா, சமந்தா, ராஷ்மிகா என.. பாலிவுட் பட ரிலீசுக்கு காத்திருக்கும் தென்னிந்திய நடிகைகள்! யார் யார் தெரியுமா
தற்போது இவர் கை வசம், இரண்டு மலையாள திரைப்படங்களும், தமிழில் ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது. திரைப்படங்கள் நடிப்பது மட்டும் இன்றி, வெப் தொடர்களிலும் அமலா பால் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
ஷூட்டிங் இல்லாத நாட்களை தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கழிப்பதை வழக்கமாக வைத்துள்ள இவர், தற்போது... மலை பகுதிக்கு சென்று அங்குள்ள ஆட்டு குட்டியை கட்டி பிடித்து கொஞ்சுவது, ஆடு மேய்ப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுளளார்.
மேலும் செய்திகள்: குட்டி நயன் அனிகாவா இது..? ஹீரோயின்களை மிஞ்சும் நியூ லுக்கில் வச்ச கண்ணு வாங்காமல் பார்க்க தோன்றும் அழகு!
அதே போல் செடிகளை பித்து விளையாடியது போன்ற வித்தியாசமான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதை பார்த்து நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் ஷூட்டிங் இல்லாததால் இப்படி இறங்கி விட்டீர்களே என கியூட்டாக கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் தற்போது அமலா பால் வெளியிட்டுள்ள இந்த அழகிய புகைப்படங்கள், ரசிகர்கள் மத்தியிலும், நெட்டிசன்கள் மத்தியிலும் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.