நயன்தாரா, சமந்தா, ராஷ்மிகா என.. பாலிவுட் பட ரிலீசுக்கு காத்திருக்கும் தென்னிந்திய நடிகைகள்! யார் யார் தெரியுமா
சமந்தா முதல் ராஷ்மிகா மந்தனா வரை, விரைவில் பாலிவுட்டில் வெளியாக இருக்கும் பிரபல தென்னிந்திய நடிகைகள் படங்கள் பற்றிய ஒரு பார்வை ....
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகைகள் அடுத்தடுத்து, பாலிவுட் திரையுலகில் நுழைந்து படம் நடிக்க துவங்கி விடுகிறார்கள். அவர்களை பற்றியும், அவர்களது வரவிருக்கும் படம் குறித்தும் பார்க்கலாம் ...
தென்னிந்திய நடிகைகள் பாலிவுட் திரையுலகில் நுழைந்து, பெரிய பேனர் படங்களைப் கைப்பற்றுவது இப்போது மிகவும் சுலபமாகி விட்டது. அதே போல் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகைகளும், சமீப காலமாக தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், பாலிவுட் நடிகை ஆலியா பட் RRR படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் செய்திகள்: குட்டி நயன் அனிகாவா இது..? ஹீரோயின்களை மிஞ்சும் நியூ லுக்கில் வச்ச கண்ணு வாங்காமல் பார்க்க தோன்றும் அழகு!
அதே போல் பிரபாஸ் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் தீபிகா படுகோனே அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
சரி ராஷி கண்ணா முதல் ராஷ்மிகா மந்தனா வரை, தற்போது பாலிவுட் திரையுலகம் சென்று விட்ட நிலையில் விரைவில் இவர்கள் நடிப்பில் வெளியாக உள்ள படங்கள் பற்றி பார்ப்போம்.
மேலும் செய்திகள்: 38 வயதிலும் டைட்டான உடையில்... கும்முனு இருக்கும் 'பாக்கியலட்சுமி' ராதிகா..! தாறுமாறு ஹாட் போட்டோஸ்..!
பான் இந்தியா படமாக வெளியான 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற 'சாமி' பாடம் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் நடனமாடச் செய்த ராஷ்மிகா மந்தனா, பாலிவுட்டில் ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'மிஷன் மஜ்னு'வில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து நடித்துள்ள படத்தின் மூலமாக ஹிந்தியிலும் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அமிதாப் பச்சன் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோருடன் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.
இவரை தொடர்ந்து நடிகை ராஷி கண்ணா அடுத்தடுத்த பாலிவுட் பட வாய்ப்புகளை கைப்பற்றும் நடிகையாக உள்ளார். தர்மா புரொடக்ஷனின், சார்பில் உருவாகும் ஆக்ஷன் த்ரில்லர் படமான 'யோதா' படத்தில் தற்போது சித்தார்த் மல்ஹோத்ராவுடன் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து, 'பார்ஸி' என்கிற வெப் சீரிஸில் ஷாஹித் கபூருடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இவை தவிர, சில ஹிந்தி படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: வெறித்தனமான ஒர்க் அவுட்... ஆளே அடையாளம் தெரியாமல் ஸ்லிம் பிட்டாக மாறிய விஜய் டிவி ஜாக்குலின்..!
இவரை தொடர்ந்து நடிகை நயன்தாரா, இயக்குனர் அட்லீ... பாலிவுட் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி உள்ள 'ஜவான்' படத்தில் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த லிஸ்டில் நடிகை 'பீஸ்ட்' பட நடிகை பூஜா ஹெக்டேவும் உள்ளார். ஏற்கனவே சில பாலிவுட் படங்களில் இவர் நடித்திருந்தாலும், தற்போது பூஜா சல்மான் கானுடன் 'கபி ஈத் கபி தீபாவளியும்', ரன்வீர் சிங்குடன் 'ரோஹித் ஷெட்டியின் சர்க்கஸ்' ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். விரைவில் இப்படங்கள் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.
'பேமிலி மேன்' வெப் தொடர் மூலம், பாலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை சமந்தா... விரைவில் பாலிவுட் திரைப்படங்களில் அறிமுகமாக உள்ளார். இது குறித்த பேச்சு வார்த்தையும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: கொரோனா பாதிப்பு காரணமாக இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி... பொன்னியின் செல்வன் பட பணிகள் முடக்கம்