தடபுடலாக ஆரம்பமாகவுள்ள 'குக் வித் கோமாளி' சீசன் 4..! குக்காக களமிறங்கும் பிரபலங்கள் குறித்து வெளியான தகவல்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் கலகலப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள, பிரபலங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாக துவங்கியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நிகராக விஜய் டிவி ரசிகர்களின் ஒட்டு மொத்த வரவேற்பையும் பெற்ற ரியாலிட்டி ஷோவாக உள்ளது 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி. எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பட வாய்ப்புகளை பிடிக்க முடியும் என்கிற நம்பிக்கையில், பிரபலங்கள் கலந்து கொள்கிறார்களோ, அதை போல் குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கும், ஸ்ட்ரெஸ் பஸ்டாராக இருந்து வருகிறது. மன அழுத்தத்தில் இருக்கும் சிலருக்கு, அவர்கள் தங்களின் கவலைகளை மறந்து வாய்விட்டு சிரிப்பதற்காக மருத்துவர்கள் கூட இந்த நிகழ்ச்சியை பார்க்க பரிந்துரைப்பதாக சில தகவல்களும் கடந்த சீசனில் போது பரவியது.
இதுவரை 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி வெற்றிகரமாக 3 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் நான்காவது சீசன் துவங்க உள்ளது. இதில் கடந்த மூன்று சீசர்களிலும் நடுவர்களாக இருந்த செஃப் தாமு ,மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் தான் நடுவர்களாக உள்ளனர் என்பதை தெரிவிக்கும் விதமாக ப்ரோமோ வெளியிட்டு உறுதி செய்தது விஜய் டிவி தரப்பு.
அதேபோல் இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் ரக்சன் தான் தொகுத்து வழங்க உள்ளா. எனினும் கடந்த மூன்று சீசர்களில் கோமாளிகளாக இருந்த சிவாங்கி, பாலா, புகழ் ஆகியோர் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருவதால், அவர்கள் இந்த சீசனில் கலந்து கொள்வார்களா? என்பது குறித்த தகவல் இதுவரை உறுதியாகி தெரியவில்லை.
எனினும் இந்த முறை புதிய கோமாளிகளாக ஜிபி முத்து, மணிமேகலை, சுனிதா, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, ரவீனா தாகா, ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் குக்குகளாக தொகுப்பாளினி அர்ச்சனா, நடிகை வாசுகி, பிக்பாஸ் தாமரைச்செல்வி, பிரியா பவானி சங்கர், விஜயலட்சுமி அகத்தியன், ஆகியோரின் பெயர் அடிபட்டு வருகிறது. வளர்ந்து வரும் சில நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி எப்போது துவங்க உள்ளது என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர்... ஜனவரி 28ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.