ஹாலிவுட் நடிகர்களுக்கே சவால் விடும் ஸ்டைலிஷ் கெட்டப்பில் ராதாரவி..! கெத்து காட்டும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!
நடிகர் ராதாரவி, மிகவும் ஸ்டைலிஷாக... ஹாலிவுட் நடிகரை போல், எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பழம்பெரும் நடிகர், எம் ஆர் ராதாவின் மகனான ராதாரவி, தன்னுடைய பள்ளி பருவங்களிலேயே ஜூலியர் சீசராக போன்ற நாடகங்களில் நடித்து, நடிப்பின் மீது தனக்குள்ள ஆர்வத்தை வெளி காட்டியவர். கல்லூரி காலங்களிலும், நண்பர்களுடன் இணைந்து பல நாடகங்களில் நடித்துள்ளார். வி கே ராமசாமி ,எம் ஆர் ஆர் வாசு, டி கே சந்திரன், போன்றவர்களின் நாடகங்களிலும் நடித்து தன்னுடைய திறமையை வெளிக்காட்டினார்.
இதை தொடர்ந்து கன்னடத்தில் 'ரகசிய ராத்திரி' என்னும் படத்தின் மூலம் தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கிய ராதாரவி, தமிழில் நடிகர் கமலஹாசன் இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் நடித்த 'மன்மத லீலை' படத்தில் நடித்தார் இந்த படமே தமிழில் இவருடைய அறிமுக படமாகவும் அமைந்தது.
இதைத் தொடர்ந்து இயக்குனர் டி ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா, வைதேகி காத்திருந்தாள், உயர்ந்த உள்ளம், சின்ன தம்பி, பூவெளி, உழைப்பாளி, குரு சிஷ்யன், என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்தார்.
இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில், நடித்துள்ள ராதாரவி வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், என எந்த விதமான கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதனை முன் வாங்கிக் கொண்டு நடிக்கும் திறமை கொண்டவர்.
'வீரன் வேலுத்தம்பி' என்ற படத்தில் மூலம் கதாநாயகனாகவும் நடித்த இவர் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால், மீண்டும் குணசித்ர வேடங்களில் நடிக்க துவங்கினார். தமிழை தாண்டி, தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளிலும் ராதாரவி நடித்துள்ளார்.
அதே போல் தன்னுடைய தங்கை நடித்து தயாரித்த செல்லமே தொடரிலும் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ராதாரவி, ஹாலிவூட் நடிகர்களை மிஞ்சும் விதமாக எடுத்துக் கொண்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சிறை வாசிகளுக்காக... புத்தகம் கேட்டு மடிப்பிச்சை எடுத்த பார்த்திபன்! குவியும் பாராட்டுக்கள்..!