சிறை வாசிகளுக்காக... புத்தகம் கேட்டு மடிப்பிச்சை எடுத்த பார்த்திபன்! குவியும் பாராட்டுக்கள்..!
சென்னையில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியில், பிரபல இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், சிறைவாசிகளுக்காக புத்தகம் வேண்டி ஒவ்வொரு அரங்காக சென்று புத்தகம் கேட்டு மடிப்பிச்சை எடுத்த சம்பவம் அனைவரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
சென்னையில் 46வது சர்வதேச புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சியை, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
மக்களின் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ நவீன விஷயங்கள் நுழைந்துவிட்டாலும், புத்தகம் வாங்கி வாசிப்பவர்களுக்கு, குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பை ஊக்குவிப்பவர்களும் இருந்து கொண்டு தான் உள்ளனர்.
விபத்தில் சிக்கிய விஜய் ஆன்டனியின் தற்போதைய நிலை என்ன? இயக்குனர் சுசீந்தரன் வெளியிட்ட தகவல்!
அந்த வகையில் புத்தக பிரியர்களுக்காகவே ஒவ்வொரு ஆண்டும் சென்னையில், இந்த புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. சுமார் ஆயிரம் புத்தக விற்பனை அரங்குகளுடன் ஜனவரி 22 ஆம் தேதி முதல் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள், என அனைவரும் வயதினருக்குமான பல்வேறு புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி 16, 17, 18, ஆகிய தேதிகளில் சர்வதேச புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, லண்டன், போன்ற 25 வெளிநாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகள் இடம் பெற்றன.
வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றது ஏன்..? முதல் முறையாக உண்மையை கூறிய பிரியங்கா சோப்ரா!
இந்த புத்தகக் கண்காட்சியை இன்று பார்வையிட்ட நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சிறைவாசிகளுக்காக புத்தகம் வேண்டி ஒவ்வொரு அரங்காக சென்று மடிபிச்சை கேட்டு புத்தகம் பெற்றது அனைவரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது. மேலும் இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.