வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றது ஏன்..? முதல் முறையாக உண்மையை கூறிய பிரியங்கா சோப்ரா!
பிரியங்கா சோப்ரா கடந்தாண்டு ஜனவரி மாதம் வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதை தொடர்ந்து, முதல் முறையாக ஏன் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டேன் என்பதை தெரிவித்துள்ளார்.
பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகையாகவும், ஹாலிவுட் வெப் சீரிஸ் போன்றவற்றிலும் நடித்து பிரபலமான ப்ரியங்கா சோப்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு, அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆண்டு வாடகை தாய்முறையில் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் குழந்தை பிறந்து ஒரு வருடங்கள் ஆனதற்கு பின்னர், முதல் முறையாக வாடகை தாய்முறையை தேர்வு செய்தேன் என்பது குறித்து பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
அதற்குள் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'வாரிசு' திரைப்படம்? எப்போது... வெளியான ரிலீஸ் தேதி!
தனக்கு மருத்துவர் ரீதியாக சில பிரச்சனைகள் இருந்ததாகவும் இதன் காரணமாகவே வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தற்போது 40 வயதாகும் பிரியங்கா சோப்ரா, அவ்வப்போது தன்னுடைய குழந்தையுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதற்குள் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'வாரிசு' திரைப்படம்? எப்போது... வெளியான ரிலீஸ் தேதி!
மேலும் பிரிட்டிஷ் வோக் என்கிற கிளாமர் பத்திரிக்கைக்காக தன்னுடைய மகள் மால்டி மேரி சோப்ரா ஜோன்ஸுடன் சேர்த்து இவர் எடுத்து கொண்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த போட்டோ ஷூட்டில் எடுத்து கொண்ட ஒரு புகைப்படத்தை, பிரியங்கா சோப்ரா சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் பிரியங்கா சோப்ராவும், அவருடைய மகள் மால்டி மேரியும் ஒரே வண்ண உடைய அணிந்துள்ளனர். தன்னுடைய தாய் பிரியங்காவை பார்த்தபடி அவருடைய குழந்தை அமர்ந்துள்ள இந்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.