விபத்தில் சிக்கிய விஜய் ஆன்டனியின் தற்போதைய நிலை என்ன? இயக்குனர் சுசீந்தரன் வெளியிட்ட தகவல்!
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, 'பிச்சைக்காரன் 2', படபிடிப்பில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இது குறித்த உண்மையை அறிக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.
தமிழ் சினிமாவில், இசையமைப்பாளராக நுழைந்து பன்முகத் திறமையால்... நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர், என தன்னை மெருகேற்றிக் கொண்டவர் விஜய் ஆண்டனி நடிப்பில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் விஜய் ஆண்டனியின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இந்த படம் வெற்றி பெற்று ஆறு ஆண்டுகள் ஆகும் நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆன்டனி. 'பிச்சைக்காரன் 2' படத்தின் படப்பிடிப்பு, ஸ்ரீலங்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் ஆன்டனிக்கு படுகாயம் ஏற்பட்டு, மலேசியாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் கூறப்பட்டது.
வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றது ஏன்..? முதல் முறையாக உண்மையை கூறிய பிரியங்கா சோப்ரா!
இந்த விபத்தில் சிக்கிய இவர் சுயநினைவின்றி, மூச்சு விடக் கூட சிரமம் பட்டதாகவும், மேலும் சில அறுவை சிகிச்சைகள் அவருக்கு செய்யப்பட்டதாகவும் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளத்தில் வெளியாகின.
இதைத்தொடர்ந்து, இதுபோல் வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரபல இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளார். குறித்து இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது... பிச்சைக்காரன் 2 படபிடிப்பில் விபத்தில் காயமடைந்த விஜய் ஆண்டனி சார் இரண்டு நாட்களுக்கு முன்னாடியே, சென்னையில் உள்ள அவருடைய வீட்டுக்கு வந்துட்டாரு. இரண்டு வாரம் டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க. கூடிய சீக்கிரம், ரசிகர்கள் கிட்ட வீடியோ மூலமாக பேசுவாரு. ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். அவரை பற்றின தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்னு கேட்டுக்கொள்கிறேன். என இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது.