'ஜவான்' படத்தில் இருந்து விலகிய ராணா..! ஷாருக்கானுக்கு வில்லனாக மிரட்டப்போகும் விஜய் சேதுபதி... !
ஷாருக்கான் நடித்து வரும், 'ஜவான்' படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தில் எப்போது விஜய் சேதுபதி இணைவார் என்பது குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாகவே விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க தேடி வரும் வாய்ப்புகளை விட, வில்லனாக நடிக்க வைக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்கள் தோல்வி அடைந்தாலும், ஹீரோவாக நடிக்கும் படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி படங்களாக அமைகிறது.
மேலும் செய்திகள்: கைவசம் தொழில் இருக்கு... கடை வச்சுக்கூட பொழச்சுக்குவேன்! இதற்க்கு மட்டும் சம்மதிக்க மாட்டேன் சாய்பல்லவி கறார்!
ஏற்கனவே மாதவனுக்கு வில்லனாக நடித்த 'விக்ரம் வேதா', விஜய்க்கு வில்லனாக நடித்த 'மாஸ்டர்' மற்றும் சமீபத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்த 'விக்ரம்' ஆகிய படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தெலுங்கில் தயாராகும் புஷ்பா 2 படத்திலும், இந்தியில் உருவாகும் ஜவான் படத்திலும் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க படக்குழுவினர் அணுகியதாக தகவல் வெளியானது.
விஜய் சேதுபதியோ சற்றும் அலட்டி கொள்ளாமல், ஹீரோவாக நடிக்கும் படங்களை விட வில்லனாக நடிக்கும் படங்களுக்கு சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி கேட்பதாகவும் தகவல் வெளியானது. இதனால் இவரை வில்லனாக நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டியதாகவும் அரசல்புரசலாக தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது ஜவான் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: டல் விமர்சனமாக இருந்தாலும் வசூலில் டாப்..! சரவணன் அருளின் 'தி லெஜெண்ட்' ! 6 நாள் இத்தனை கோடியா?
இதுகுறித்து வெளியான தகவலில், அட்லீ இயக்கும் இந்த படத்தில் முதலில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க அணுகியவர் பாகுபலி வில்லன் ராணாவை தான். ஆனால் உடல்நல குறைவு காரணமாக அவர் இந்த பட வாய்ப்பை ஏற்ற மறுத்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து விஜய் சேதுபதியை படக்குழு அணுகியது. ஷாருக்கானுக்கு விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க வேண்டும் ஏன் தன்னுடைய அபிப்ராயத்தை கூற, விஜய் சேதுபதி இந்த வாய்ப்பை மறுக்க மனம் இல்லாமல் ஏற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள்: மஞ்சள் நிற லெஹங்காவில்... மிதமான கவர்ச்சி காட்டி மனம் மயக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி! லேட்டஸ்ட் போட்டோஸ்.!
ஆகஸ்ட் மாத இறுதியில் 'ஜவான்' படப்பிடிப்பு, சென்னையில் நடைபெற உள்ளதாகவும், அதில் விஜய் சேதுபதி பங்கேற்றுக்கும் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.