அட்ராசக்க... கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதிக்கு பதில் இனி இவரா? வெளியான மாஸ் தகவல்!
உதயநிதியை வைத்து கமல் ஹாசன் தயாரிக்க இருந்த படத்தில், தற்போது உதயநிதிக்கு பதிலாக நடிக்க உள்ளது யார்? என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல் ஹாசன் 'விக்ரம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, சில படங்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்தார். அந்த வகையில், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும், புதிய படம் ஒன்றில், பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான... உதயநிதி ஸ்டாலின் நடிப்பது உறுதியானது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், விரைவில் படபிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சரவையில் 'இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத்துறை' அமைச்சராக பதவி ஏற்று கொண்டதால், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் படம் தான் தன்னுடைய கடைசி திரைப்படம் என்றும், கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட படத்தில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார்.
எனவே உதயநிதி இந்த படத்தில் இருந்து விலகியதால், இந்த படத்தை தயாரிக்க முடிவில் இருந்து கமல்ஹாசன் பின் வாங்கியதாக கூறப்பட்டது. தற்போது இந்த வதந்திக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உதயநிதிக்கு பதில், இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனினும் இது குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே நேரம் விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.