குடும்ப குத்து விளக்கு போல்.. பச்சை நிற சல்வாரில்.. தலை நிறைய மல்லிப்பூ வைத்து மனதை மயக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி!
KGF, கோப்ரா போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி... குடும்ப குத்துவிளக்கு போல் வெளியிட்டுள்ள ரீசென்ட் போட்டோஸ் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, மிஸ் சூப்பர் நேஷனல் பட்டத்தை பெற்றவர் நடிகை ஸ்ரீநிதி செட்டி. இதை தொடர்ந்து மிஸ் திவா, உள்ளிட்ட பல அழகி போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூட்டியுள்ளார்.
கன்னட திரை உலகில் நடிகர் யாஷ் நடித்து, உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்த, கே.ஜி.எஃப் சேப்டர் 1, திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஸ்ரீநிதி செட்டி, முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பட நாயகியாக மாறினார். இதைத்தொடர்ந்து கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது சேப்டரிலும் கதாநாயகியாக நடித்த இவர், தமிழில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக 'கோப்ரா' படத்தில் அறிமுகமானார்.
கே.ஜி.எஃப் படம் வெற்றி பெற்ற அளவிற்கு 'கோப்ரா' படம் வரவேற்பை பெறாதது இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் அமைவதில் சிக்கலை ஏற்படுத்தியது. தொடர்ந்து திரை உலகில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிக்கும், பிக் பட்ஜெட் படங்களையே டார்கெட் செய்து வரும் ஸ்ரீநிதி செட்டி அவ்வபோது ரசிகர்கள் மனதை கவரும் விதமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது பச்சை நிற சல்வார் அணிந்து, தலை நிறைய மல்லிப்பூ நெத்து சுட்டி சூடி குடும்ப குத்து விளக்காக வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
தற்போது வரை இவருடைய அடுத்த பட அறிவிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதால், விரைவில் ஸ்ரீநிதி ஷெட்டி அடுத்ததாக யாருக்கு ஜோடியாக நடிப்பார் என்பது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.