Shruti Haasan: 'எனக்கு எல்லாம் வேண்டும்'... காதலரை கட்டி பிடித்து ஹாட் ரொமான்ஸ் செய்யும் ஸ்ருதி ஹாசன்!
நடிகை ஸ்ருதி ஹாசன் தன்னுடைய காதலர், ஷாந்தனுவுடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை இன்ஸ்ட்டா ஸ்டேட்டஸில் வெளியிட அது வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வரும், உலக நாயகன் கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன், தற்போது தன்னுடைய காதலர் சாந்தனு ஹசாரிக்காவுடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சில காலம் திரை உலகில் இருந்து விலகி ஆல்பம் பாடல்கள் மீது கவனம் செலுத்தி வந்த ஸ்ருதிஹாசன், நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 'லாபம்' படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து மீண்டும், விறுவிறுப்பாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடித்து ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கு திரை உலக்கில், பிரபாஸ், சிரஞ்சீவி, நந்தமுரி பாலகிருஷ்ணா... போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வரிசை கட்டி நடித்து வருகிறார்.
விஷாலை சந்திக்க அழைப்பு விடுத்த முதலமைச்சர்..! தேர்தலில் போட்டியா? அரசியல் களத்தில் பரபரப்பு!
அண்மையில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ள, வால்டர் வீரய்யா திரைப்படத்திலிருந்து நுவ்வு ஸ்ரீதேவி நேனு... என்கிற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடல் வெளியான பின்னர் மீண்டும், சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்படும் நடிகையாக மாறியுள்ள ஸ்ருதி.
அவ்வப்போது தன்னுடைய வாழ்க்கை மற்றும் காதலருடன் ஆன டேட்டிங் குறித்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள இவர், தற்போது 'எனக்கு எல்லாம் வேண்டும்' என்கிற கேப்ஷனுடன், காதலர் சாந்தனுவை கட்டிப்பிடித்தபடி, சிரித்துக் கொண்டிருக்கும் குளோசப் ஷார்ட் புகைப்படம் ஒன்றை, இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வெளியிட, இந்த புகைப்படம், அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஸ்ருதிஹாசன் நடித்துவரும் 'வால்டர் வீரய்யா' திரைப்படம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த படத்தை கே.எஸ்.ரவீந்திரா இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் கேத்தரின் தெரேசா, ரவி தேஜா, நிவேதா பெத்துராஜ், பாபி சிம்ஹா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக 'சலார்' படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை, இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இப்படம் 2023 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.