மாஸ்டருக்கு பின் லியோவிலும் விஜய்யுடன் கூட்டணியா? - உண்மையை போட்டுடைத்த விஜய் சேதுபதி
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி லியோ படத்திலும் இணைந்துள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதுதவிர மிஷ்கின், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர், கவுதம் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகை மேத்யூ தாமஸ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், நடிகர் மன்சூர் அலிகான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது.
லியோ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பீஸ்ட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ திரைப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையிலும், இரண்டாம் கட்ட ஷூட்டிங் காஷ்மீரிலும் நடைபெற்றது. காஷ்மீரில் இரண்டு மாதங்கள் தங்கி படத்தின் பெரும்பாலான காட்சிகளை படம்பிடித்த படக்குழு, கடந்த மார்ச் மாத இறுதியில் சென்னைக்கு திரும்பியது.
தற்போது சென்னையில் உள்ள ஆதித்ய ராம் பிலிம் சிட்டியில் லியோ படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அங்கு விஜய்க்கும், ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கும் இடையேயான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதிவரை அந்த காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும், அது முடிந்ததும் கிளைமாக்ஸ் காட்சியை ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம் லோகேஷ் கனகராஜ்.
இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா ராஜேஷின் 'ஃபர்ஹானா' திரைப்படம் எந்த மதத்திற்கும்.. உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல! படக்குழு விளக்கம்!
லியோ படம் குறித்து சில தகவல்களும் தொடர்ந்து கசிந்த வண்ணம் உள்ளன. அப்படி கசிந்த ஒரு தகவல் தான் விஜய் சேதுபதி இப்படத்திற்காக பின்னணி குரல் கொடுக்க உள்ளதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இப்படத்தில் பணியாற்றி வரும் இயக்குனர் ரத்னகுமாரும், விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி பயன்படுத்திய கண்ணாடியின் புகைப்படத்தை பதிவிட்டதால், அவர் விஜய் சேதுபதி லியோ படத்தில் நடிப்பதை சூசகமாக அறிவித்துள்ளார் என்று ரசிகர்கள் யூகித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதியே விளக்கம் அளித்துள்ளார். அதன்படி தான் லியோ படத்தில் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துள்ள அவர், ரத்னா ஏன் அந்த புகைப்படத்தை பதிவிட்டார் என்பதும் தனக்கு தெரியாது என கூறியுள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி லியோ படத்தில் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... watch : மஸ்காரா பாடலுக்கே டஃப் கொடுக்கும் போல..! வைரலாகும் ‘பிச்சைக்காரன் 2’ பட ஐட்டம் சாங் ‘நாநா புலுக்’