நிற்க முடியாத மாற்று திறனாளி ரசிகரை... குழந்தை போல் கையில் ஏந்தியபடி போஸ் கொடுத்த விஜய்! வைரலாகும் புகைப்படம்!
தளபதி விஜய் இன்று பனையூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில், விஜய் மக்கள் இயக்க ரசிகர்களை சந்தித்த நிலையில், மாற்றுத்திறனாளி ரசிகரை கையில் தூக்கி வைத்து எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் அவ்வபோது நேரம் கிடைக்கும் போதெல்லாம், மாவட்ட ரீதியாக தன்னுடைய ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் சந்திப்பை தவிர்த்து வந்த விஜய், தற்போது சகஜ நிலை திரும்பி உள்ளதால். மீண்டும் ரசிகர்களை சந்திக்க துவங்கியுள்ளார்.
அந்த வகையில் சென்னை பனையூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில், சமீபத்தில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, மக்கள் இயக்கம் ரசிகர்களை சமீபத்தில் சந்தித்து விஜய் மக்கள் இயக்கம் நல பணிகள் குறித்து விவாதித்தது மட்டும் இன்றி, ரசிகர்களுடன் புகைப்படங்களும் எடுத்து கொண்டார்.
இது எப்படி நடந்தது? ஒரே புகைப்படத்தில் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்த விஜய் சேதுபதி!
இதைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாக செங்கல்பட்டு, அரியலூர், திண்டுக்கல்,கடலூர், ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை, விஜய் இன்று பனையூரில் உள்ள அவருடைய அலுவலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்கு வாரிசு படத்தின் லுக்கில், கருப்பு நிற பேண்ட் மற்றும் கருப்பு நிற ஷர்ட் அணிந்து ஹாண்ட்சம் லுக்கில் விஜய் வந்தபோது, அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஒன்று திரண்டு வரவேற்பு கொடுத்தனர். மேலும் தன்னை சந்திக்க வந்த ரசிகர்களுக்கு, விஜய் மதிய உணவாக பிரியாணி விருந்து கொடுத்து கவனித்துள்ளார்.
சுமார் 3 மணி நேரம் ரசிகர்களை சந்தித்து பேசியது மட்டுமின்றி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த சந்திப்பில் போது, மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரால் நிற்க முடியாத என்பதை புரிந்து கொண்டு, விஜய் அவரை கையில் குழந்தை போல் ஏந்திய படி அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் விஜய் முன்பு கூட சில மாற்றுத்திறனாளி ரசிகர்களுடன் மிகவும் கனிவாகவும், அன்புடனும் அவர்கள் பக்கத்தில் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விஜய்யின் ரசிகர்கள், பழைய சம்பவங்களையும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
மேலும் இந்த கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விஜய் ரசிகர்கள் மன்றத்தின் அடையாள அட்டை வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே இந்த சந்திப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், மற்ற ரசிகர்கள் அனுமதி அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.