பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகர்! அவருக்கு பதில் நடிக்கப்போவது இவரா? பரபரப்பு தகவல்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து முக்கிய நடிகர் ஒருவர் வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து, தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'.
எதிர்பாராத திருப்புமுனைகளுடன் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்டாலின், சுஜிதா, ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், போன்ற பல நடித்து வருகின்றனர்.
'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகா இடத்தை தட்டி தூக்கிய கங்கனா ரணாவத்! வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!
இந்த சீரியல் துவங்கியதில் இருந்து, அவ்வபோது பிரபலங்கள் மாறி வருவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்ட பின், அவருடைய கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வந்த நிலையில், தற்போது லாவண்யா நடித்து வருகிறார்.
Pandian stores
மேலும் ஐஸ்வர்யா கதாபாத்திரமும் அடிக்கடி மாற்றப்பட்டு வந்தது. இந்த சீரியல் துவங்கும் முன்பு மீனா கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகை நடிக்க இருந்த நிலையில், அந்த சீரியல் நடிகை திடீர் என மாற்றப்பட்டார் என்பதும் அனைவரும் அறிந்ததே.
pandian store
இந்நிலையில் இந்த சீரியலில் மல்லியின் மகன், பிரசாந்த் கதாபாத்திரத்தில் நடித்து வரும் வசந்த் அதிரடியாக இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவருக்கு பதில் முத்தழகு சீரியலில் நடித்து வரும் மகேஷ் சுப்பிரமணியம், பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பிரசாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவர் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.