2-ஆவது நாளே வசூலில் 43% சரிவை சந்தித்த 'கோட்'! 'ஜெயிலர்' வசூலை நெருங்க முடியாமல் திணறும் தளபதி!
தளபதி விஜய் நடிப்பில் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான 'கோட்' திரைப்படம் இரண்டாவது நாளிலேயே வசூலில், சுமார் 43 சதவீத சரிவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Thalapathy Vijay TVK Party
தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில், புதிய கட்சி ஒன்றை துவங்கி உள்ள நிலையில், கூடிய விரைவில் முழு நேர அரசியல்வாதியாக அவதாரம் எடுக்க உள்ளார். அரசியல் பணிக்காக தன்னுடைய திரைப்பட பணிகளில் இருந்து முழுமையாக விலகுவதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். அதேபோல் தன்னுடைய கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய், அதனை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திலும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் பதிவு செய்தார்.
TVK Party First Conference:
தளபதி விஜய்யின் TVK கட்சியின், அரசியல் ஆயத்த பணிகள் ஒரு புறம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்த மாதம் தன்னுடைய கட்சி கொடி மற்றும் கட்சியின் பாடலை... சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெளியிட்டார் தளபதி. கட்சியினர் மற்றும் TVK கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதை தொடர்ந்து, செப்டம்பர் 23-ஆம் தேதி விக்ரவாண்டியில் விஜய்யின் கட்சி சார்பில் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தளபதி விஜய் பங்கேற்க உள்ளார். மேலும் சுமார் 2000-பேர் கலந்து கொள்ளும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
The GOAT Movie:
கட்சி பணியில் முழுமையாக இறங்குவதற்கு முன்பு, விஜய் தன்னுடைய 69 வது படத்தில் நடித்து முடிப்பார் என கூறப்படும் நிலையில்... இப்படத்தின் பணிகள் இன்னும் துவங்காமல் உள்ளதால், ஒரு வேலை 'கோட்' படம் தான் விஜய்யின் கடைசி படமா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்நிலையில் விஜய்யின் 68வது திரைப்படமாக உருவான 'கோட்' நேற்று முன்தினம் (செப்டம்பர் 5-ஆம் தேதி) ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்திருந்த இந்த படத்தில், அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் தளபதி நடித்திருந்தார். மேலும் விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி நடித்திருந்த நிலையில்... பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் அமீர், பார்வதி நாயர், லைலா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
The GOAT budget And Collection
யாரும் எதிர்பாராத விதமாக சிவகார்த்திகேயன் கேமியோ மற்றும் தோனி ஸ்கிரீன் ப்ரசென்ஸ் இடம்பெற்றிருந்தது. மேலும் வழக்கம்போல் தன்னுடைய தனித்துவமான கதை தளத்தில் வெங்கட் பிரபு இயக்கி இப்படத்தை, ஆக்சன் திரைப்படமாக இயக்கி இருந்தார். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்திருந்தது ஏஜிஎஸ் நிறுவனம். குறிப்பாக தளபதி விஜய்க்கு மட்டுமே இப்படத்தில் நடிக்க சுமார் 200 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. எனினும் விஜய்க்கு உள்ள மார்க்கெட் காரணமாக ரிலீஸ்க்கு முன்பே, ஃப்ரீ ரிலீஸ் பிசினஸ் மூலம் 400 கோடி லாபத்தை இப்படம் ஈட்டிவிட்டதாக அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
GOAT Movie Day 2 Box Office
இப்படத்தின் முதல் நாள் வசூல், 'லியோ' படத்தின் வசூலை விட மிகவும் குறைவு என தகவல் வெளியானதை தொடர்ந்து, ஏஜிஎஸ் நிறுவனம் முதல் நாள் வசூல் குறித்த தகவலை நேற்று மாலை வெளியிட்டது. அதில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'கோட்' திரைப்படம் முதல் நாளே 126.32 கோடி வசூலித்ததாக கூறப்பட்டிருந்தது. இது உண்மையான வசூல் தகவல் இல்லை என ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட சிலர் தங்களுடைய விமர்சனந்த்தையும் தெரிவித்திருந்த நிலையில்... இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவலை பாக்ஸ் ஆபிஸ் வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர்.
Jailer Vs Goat:
அதன்படி இப்படம் இரண்டாவது நாளில், சுமார் 43 சதவீத சரிவை பாக்ஸ் ஆபிஸில் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது நேற்று விடுமுறை தினம் இல்லை என்பதால் 24 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாம். இதன் மூலம் தமிழகத்தில் முதல் நாளில் ஈட்டிய 43 கோடியுடன் சேர்த்து, இதுவரை 63 கோடி மட்டுமே இப்படம் வசூலித்துள்ளதாக கூறியுள்ளனர். இதன் மூலம் 'ஜெயிலர்' படம் இரண்டு நாளில் தமிழகத்தில் வசூலித்த 70 கோடி வசூல் சாதனையை... முறியடிக்க முடியாமல் திணறி உள்ளார் தளபதி.
தளபதி விஜய் நடித்த இந்த ஹிட் படங்கள் எல்லாம் ரீமேக் படங்களா?
43% Dropped:
மேலும் இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்கள் என்பதால், 'கோட்' திரைப்படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள். அதே சமயம் 'கோட்' திரைப்படம் இரண்டாவது நாளிலேயே சுமார் 43 சதவீத சரிவை சந்தித்துள்ளது, பாக்ஸ் ஆபிசில் விழுந்த பலத்த அடியாகவே பார்க்கப்படுகிறது.