MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அஜித்துக்காக ஏ.ஆர்.ரகுமான் பாடலை காப்பியடித்த தேவா! சூப்பர்.. டூப்பர் ஹிட் அடித்த ரொமான்டிக் சாங் எது தெரியுமா

அஜித்துக்காக ஏ.ஆர்.ரகுமான் பாடலை காப்பியடித்த தேவா! சூப்பர்.. டூப்பர் ஹிட் அடித்த ரொமான்டிக் சாங் எது தெரியுமா

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பாடலை சுட்டி காட்டி, இதே ராகத்தில் அஜித்தின் 'ஆசை' படத்தில் ரொமான்டிக் பாடல் இடம்பெற வேண்டும் என இயக்குனர் வசந்த் கேட்க, தனது பணியை சிறப்பாக செய்து முடித்தார் தேவா. அது எந்த பாடல் என்பதை விரிவாக பார்க்கலாம்.  

2 Min read
Author : manimegalai a
Published : Sep 07 2024, 08:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Heart of Music

Heart of Music

ஒரு திரைப்படத்திற்கு எப்படி கதை, திரைக்கதை, நடிகர்கள், முக்கியமோ... அதேபோல் இசை என்பதும் ஒரு திரைப்படத்திற்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது. பழங்காலத்தில் இருந்தே இசையை மேடை நாடகங்களிலும் திரைப்படங்களிலும், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு காட்சியை நாம் பார்க்கும் அந்த சூழ்நிலையை ரசிகர்கள் எளிதில் உணரும் விதத்தில் அமைகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Director Shankar

Director Shankar

அதேபோல் திரைப்படங்களிலும் இடம்பெறும் பாடல்கள், அதனைக் கேட்கும் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதத்தில் இருக்கிறது. எனவே தான் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், மணிரத்தினம், போன்ற இயக்குனர்கள் தாங்கள் இயக்கம் திரைப்படங்களில், கண்டிப்பாக நான்கு பாடல்களாவது இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
 

36
Prised Music Directors

Prised Music Directors

சமீப காலமாக, சில திரைப்படங்கள் பாடல்களே இல்லாமல் வெளியாகி இருந்தாலும்... அந்த படங்களை பிஜிஎம் இசையால் தூக்கி நிறுத்துகிறார்கள் இசையமைப்பாளர்கள். இதன் காரணமாகவே ஒவ்வொரு படத்திற்கும் இசையமைப்பாளர் என்பவர் மிகவும் முக்கிய நபராக பார்க்கப்படுவதோடு, படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு அவரின் இசையை கொண்டாடும் விதத்தில், ஆடியோ லான்ச் நிகழ்ச்சியும் நடத்தி அவர்களை சிறப்பிக்கிறார்கள்.
 

46
AR Rahman

AR Rahman

இந்நிலையில் ஆஸ்கர் நாயகன்,  ஏ ஆர் ரகுமான் போட்ட பாடலின் ராகத்தை அப்படியே காப்பி அடித்து இரண்டு சூப்பர் ஹிட் பாடல்களை இசையமைப்பாளர் தேவா கொடுத்துள்ளார். இது பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். அதாவது ஒவ்வொரு ராகத்திற்கும் ஒவ்வொரு தன்மை உண்டு என்பது அதை பற்றி அலசி ஆராய்ந்த இசையமைப்பாளர்களுக்கு தெரியும். அதே சமயம் ஒரு ராகத்தை எந்த சூழலுக்கும் பொருந்தும் வகையில் பாடல்களை உருவாக்கவும் முடியும். அந்த வகையில் ஏ.ஆர்.ரகுமான் 'டூயட்' படத்தில் உச்சாகத்தை வெளிப்படுத்தும் விதத்தில், எனர்ஜிடிக் பாடலாக உருவாக்கிய 'மெட்டுப்போடு மெட்டுப்போடு' பாடலை துளியும் அந்த பாடலின் சாயல் இன்றி... அஜித்துக்கு ரொமாண்டிக் பாடலை உருவாக்கி கொடுத்து ஹிட் அடிக்கவைத்தார் இசையமைப்பாளர் தேவா.

தளபதி விஜய் நடித்த இந்த ஹிட் படங்கள் எல்லாம் ரீமேக் படங்களா?
 

56
Aasai Movie Music Director Deva

Aasai Movie Music Director Deva

அதாவது ஏ.ஆர்.ரகுமானின் 'மெட்டுப்போடு மெட்டுப்போடு' பாடல் இயக்குனர் வசந்துக்கு மிகவும் பிடித்து போன நிலையில்.. இதே 'ஆனந்த பைரவி' ராகத்தில், ஆசை படத்தில் அஜித்தின் ரொமான்டிக் பாடல் வேண்டும் என கேட்டுள்ளார். இதை தொடர்ந்து தேவா 'கொஞ்சநாள் பொறு தலைவா... வஞ்சிக்கொடி இங்கே வருவா' என்கிற அழகிய ரொமான்டிக் பாடலை இசையமைத்து கொடுத்தார். இந்த பாடல் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது மட்டும் இன்றி, ஏ.ஆர்.ரகுமானின் மனதை கவர்ந்த பாடல்களில் ஒன்றாகவும் மாறியதாம். இதை தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த திருமூர்த்தி படத்திலும் இதே ராகத்தில் இயக்குனர் ஒரு பாடல் வேண்டும் என தேவாவிடம் கேட்டபோது.. அவர் 'செங்குருவி செங்குருவி காடமடை செங்குருவி' என்கிற பாடலை இசையமைத்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

66
Yuvan Shankar Raja

Yuvan Shankar Raja

இது போல் ஒரு பாடலையோ... அல்லது இசையையோ குறிப்பிட்டு இயக்குனர்கள் கூறி, தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்கும் பழக்கம் காலம் காலமாக இருந்துள்ளது. எம்.எஸ்.வி, இசையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற இசை ஜாம்பவான்களிடம் கூட, மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் வெளியான பாடலின் ராகத்தை சுட்டி காட்டி, இதே ராகத்தில் ஆனால் அந்த பாடலின் சாயல் இல்லாமல் தங்களுடைய படத்திற்கு ஒரு பாடல் அமைத்து தர வேண்டும் என கூறுவது வழக்கமான ஒன்று தான். யுவன் ஷங்கர் ராஜா போன்ற இசையமைப்பாளர்கள், இதனை ஓபனாகவே கூறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமாவின் டாப் 10 பணக்கார ஹீரோஸ்; 5,400 கோடிக்கு அதிபதியாக முதலிடத்தில் இருப்பது யார் தெரியமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஏ. ஆர். ரகுமான்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved