- Home
- Cinema
- அஜித்தால் எந்த பிரச்சனையும் இல்ல... எல்லாம் அவர்களால் தான்! ஏகே 62 வாய்ப்பு பறிபோனது குறித்து விக்கி ஓபன் டாக்
அஜித்தால் எந்த பிரச்சனையும் இல்ல... எல்லாம் அவர்களால் தான்! ஏகே 62 வாய்ப்பு பறிபோனது குறித்து விக்கி ஓபன் டாக்
லைகா நிறுவனம் தயாரிக்கும் அஜித்தின் ஏகே 62 பட வாய்ப்பு பறிபோனது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் முதன்முறையாக மனம்திறந்து பேசி உள்ளார்.

இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ரிலீஸ் ஆன போடா போடி படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து தனுஷ் தயாரிப்பில் இவர் இயக்கிய நானும் ரெளடி தான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு இயக்குனர் விக்னேஷ் சிவனின் வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இப்படத்தின் போது தான் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து 7 ஆண்டுகள் காதலித்த இந்த ஜோடி கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டது. திருமணத்தின் போது விக்னேஷ் சிவனுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் அஜித்தின் ஏகே 62 திரைப்படம். இப்படத்தை இயக்க கமிட் ஆனபோது ‘எல்லாமே இனிமே நல்லா தான் நடக்கும்’ என எமோஷனலாக பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் விக்கி.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் சோழர்களோடு மோதும் பாண்டியர்கள்... பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ரிலீசாகும் யாத்திசை
அஜித் படத்தை இயக்கப்போகிறோம் என மிகுந்த ஆவலோடு இருந்த விக்னேஷ் சிவனுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கும் விதமாக கடந்த ஜனவரி மாத இறுதியில் அவரை அப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கி விட்டனர். அவர் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. ஆனால் அதுபற்றி எந்தவித கருத்தும் மவுனம் காத்து வந்த விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டியில் முதன்முறையாக அதுகுறித்து மனம்திறந்து பேசி உள்ளார்.
அதில் அவர் கூறியதாவது : “ஏகே 62 பட வாய்ப்பு பறிபோனது வருத்தம் தான். இருந்தாலும் அது மகிழ் திருமேனி மாதிரி ஒருவருக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. ஒரு அஜித் ரசிகனாக இப்படத்தைக் காண ஆவலோடு இருக்கிறேன். ஏகே 62-வை பொறுத்தவரை அஜித் சார் பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை. தயாரிப்பு தரப்புக்கு தான் 2-ம் பாதி கதை பிடிக்கவில்லை, அதனால் தான் அது கைநழுவி போனது” என கூறி உள்ளார்.
அதோடு தனது அடுத்த படம் குறித்தும் அந்த பேட்டியில் பேசி உள்ள விக்னேஷ் சிவன். அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்க பேச்சு வார்த்தை நடப்பதாகவும், தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு முன் தான் எழுதிய ஆப் சம்பந்தப்பட்ட கதையை தான் அடுத்து படமாக எடுக்க உள்ளதாகவும் கூறினார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ரூ.100 கோடியில் பிரம்மாண்ட வீடு; ரூ.300 கோடிக்கு மேல் சொத்து என ராஜ வாழ்க்கை வாழும் அல்லு அர்ஜுன்