MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரூ.100 கோடியில் பிரம்மாண்ட வீடு; ரூ.300 கோடிக்கு மேல் சொத்து என ராஜ வாழ்க்கை வாழும் அல்லு அர்ஜுன்

ரூ.100 கோடியில் பிரம்மாண்ட வீடு; ரூ.300 கோடிக்கு மேல் சொத்து என ராஜ வாழ்க்கை வாழும் அல்லு அர்ஜுன்

நடிகர் அல்லு அர்ஜுன் தனது 41-வது பிறந்தநாளை நாளை கொண்டாட உள்ள நிலையில், அவரது சொத்து மதிப்பு, சம்பளம், கார் கலெக்‌ஷன் உள்ளிட்டவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Apr 07 2023, 08:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் கடந்த 1983-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி சென்னையில் பிறந்தார். இவர் 2 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக விஜேதா என்கிற படத்தில் நடித்தார். இதையடுத்து வளர்ந்து அனிமேட்டர் ஆக வேண்டும் என ஆசைப்பட்ட அல்லு அர்ஜுன், பின்னர் சினிமாவின் பக்கம் திரும்பினார். இவர் கடந்த 2003-ம் ஆண்டு வெளிவந்த கங்கோத்ரி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

கங்கோத்ரி படம் ஹிட் ஆனாலும் அல்லு அர்ஜுனை மிகவும் பேமஸ் ஆக்கியது அவர் 2004-ம் ஆண்டு நடித்த ஆர்யா திரைப்படம். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதும் இவருக்கான ரசிகர் வட்டமும் பெரிதானது. இதையடுத்து 2005-ல் இவர் நடித்த Bunny திரைப்படம் ரிலீசாகி அல்லு அர்ஜுனை முன்னணி நடிகராக உயர்த்திவிட்டது. பின்னர் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து இன்று தெலுங்கு திரையுலகின் தவிர்க்க முடியாத நாயகனாக உயர்ந்துவிட்டார் அல்லு அர்ஜுன்.

37

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அலவைகுண்டபுரமுலு மற்றும் புஷ்பா ஆகிய திரைப்படங்கள் அதிரி புதிரியான வெற்றியை ருசித்தது. குறிப்பாக புஷ்பா திரைப்படம் பான் இந்தியா அளவில் மாபெரும் வெற்றிபெற்று அவரை பான் இந்தியா ஸ்டாராக உயர்த்தியது. தற்போது புஷ்பா படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். அவர் தனது 41-வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தற்போதே சமூக வலைதளங்களில் களைகட்ட தொடங்கி உள்ளன.

47

தெலுங்கு திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் அல்லு அர்ஜுனும் ஒருவர். இவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.370 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு படத்திற்காக ரூ.32 கோடி சம்பளம் வாங்கி வந்த அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது சம்பளத்தை ரூ.50 கோடியாக உயர்த்திவிட்டார். இவரது ஆண்டு வருமானம் மட்டும் ரூ.30 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... கலாஷேத்ரா விவகாரத்தில் அரசியல் நடக்கிறது... ஹரி பத்மன் சிறந்த ஆசிரியர் - பிக்பாஸ் அபிராமி பரபரப்பு பேட்டி

57

நடிகர் அல்லு அர்ஜுன் படங்களைத் தவிர விளம்பரங்களிலும் அதிகளவில் நடித்து வருகிறார். இவர் ஒரு விளம்பரத்தில் நடிக்க ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். அதுமட்டுமின்றி இவர் ஐதராபாத்தில் சொந்தமாக நைட் கிளப் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதன்மூலமும் இவருக்கு லட்சக்கணக்கில் வருவாய் கிடைத்து வருகிறதாம்.

67

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கார் மீது அலாதி பிரியம். இவர் ரூ.1.2 கோடி மதிப்புள்ள ஜாகுவார் XJL, ரூ.86 லட்சம் மதிப்புள்ள ஆடி A7, ரூ.80 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ X5 ஆகிய சொகுசு கார்கள் உள்ளன. இதுதவிர தனக்கு தேவையான அதிநவீன வசதிகளுடன் கூடிய வேனிட்டி வேன் ஒன்றையும் சொந்தமாக வைத்துள்ளார் அல்லு அர்ஜுன். இந்த வேனின் மதிப்பு மட்டும் ரூ.7 கோடியாம்.

77

அல்லு அர்ஜுனுக்கு சொந்தமாக ஐதராபாத்தில் பிரம்மாண்ட பங்களா ஒன்றும் உள்ளது. அதன் மதிப்பு மட்டும் ரூ.100 கோடி இருக்குமாம். நடிகர் அல்லு அர்ஜுன் சொந்தமாக ஆஹா என்கிற ஓடிடி தளத்தையும் வைத்துள்ளார். இதன்மூலம் ஏராளமான பிளாக்பஸ்டர் படங்கள், வெப் தொடர்களையும் வெளியிட்டு வருகிறார். அல்லு அர்ஜுனுக்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர் சினேகா ரெட்டி என்பவரை மணந்துகொண்டார். இந்த ஜோடிக்கு அல்லு அயன் என்கிற மகனும், அல்லு அர்ஹா என்கிற மகளும் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... மீண்டும் நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்ய ரெடியான ஜெய்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அல்லு அர்ஜுன்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image2
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Recommended image3
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved