கலாஷேத்ரா விவகாரத்தில் அரசியல் நடக்கிறது... ஹரி பத்மன் சிறந்த ஆசிரியர் - பிக்பாஸ் அபிராமி பரபரப்பு பேட்டி
கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டதன் பின்னணி அரசியல் இருப்பதாக நடிகை அபிராமி வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஹரி பத்மன் என்கிற பேராசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு எதிராக மாணவிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதனிடையே கலாஷேத்ரா கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவியான அபிராமி, ஹரி பத்மன் தரப்பு நியாயத்தையும் கேட்க வேண்டும் என அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
அபிராமியின் இந்த பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. சமூக வலைதளங்களில் அவரது கருத்து எதிராக பல்வேறு பதிவுகள் போடப்பட்டு வந்தன. பாடகி சின்மயியும் அபிராமியின் கருத்தை விமர்சித்து பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரம் ஆகி வரும் நிலையில், அதுகுறித்து அபிராமி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசி உள்ளார்.
இதையும் படியுங்கள்... பாலியல் புகாரில் சிக்கிய கலாஷேத்ரா கல்லூரிக்கு ஆதரவாக கருத்து சொன்ன பிக்பாஸ் அபிராமி... பதிலடி கொடுத்த சின்மயி
அதில் அவர் கூறியதாவது : “கலாஷேத்ரா பற்றி சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களைப் பார்த்து மிகுந்த வேதனை அடைந்தேன். ஹரி பதம்ன் மீது மாணவிகள் இவ்வளவு நாட்களாக பாலியல் தொல்லை புகார் அளிக்காதது ஏன்? கலாஷேத்ரா ஆசிரியர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு ஹரி பத்மனுக்கு எதிராக பேசுமாறு சொன்னார். ஹரி பத்மன் மிகவும் சிறந்த ஆசிரியர்.
ஹரி பத்மன் எங்களுக்கு வகுப்பெடுத்த வரை எந்தவித தொல்லையும் அளித்ததில்லை. இந்த விவகாரத்தில் கலாஷேத்ரா பள்ளி மாணவிகள் தான் பலியாடு ஆக்கப்படுகிறார்கள். ஹரி பத்மனுக்கு எதிராக பேசச்சொல்லி மாணவிகளை ஆசிரியைகள் நிர்மலா, நந்தினி ஆகியோர் தூண்டிவிடுகிறார்கள். கலாஷேத்ரா பாலியல் தொல்லை புகார் அளித்ததன் பின்னணியில் அரசியல் நடக்கிறது” என அபிராமி வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... மீண்டும் நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்ய ரெடியான ஜெய்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு