MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாலியல் புகாரில் சிக்கிய கலாஷேத்ரா கல்லூரிக்கு ஆதரவாக கருத்து சொன்ன பிக்பாஸ் அபிராமி... பதிலடி கொடுத்த சின்மயி

பாலியல் புகாரில் சிக்கிய கலாஷேத்ரா கல்லூரிக்கு ஆதரவாக கருத்து சொன்ன பிக்பாஸ் அபிராமி... பதிலடி கொடுத்த சின்மயி

பாலியல் புகாரில் சிக்கிய கலாஷேத்ரா கல்லூரிக்கு ஆதரவாக பிக்பாஸ் அபிராமி  கருத்து தெரித்த நிலையில், அவருக்கு பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Apr 06 2023, 10:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் உள்பட நான்கு பேர் அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தெரிவித்து அங்கு பயிலும் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அக்கல்லூரி பேராசிரியர் மீது முன்னாள் மாணவி ஒருவரும் புகார் தெரிவித்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

24

இந்த கல்லூரி விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில்,  கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிக்பாஸ் அபிராமி, இந்த கலாஷேத்ரா விவகாரம் குறித்தும் பேசினார். ஏனெனில் அவர் அந்த கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவி ஆவார். அவர் ஒரு தரப்பில் இருக்கும் குற்றச்சாட்டை மட்டும் வைத்து பேசக்கூடாது. இதன் மறுபக்கத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்... ஆஸ்கர் விருது வென்ற கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது - குடியரசுத் தலைவர் வழங்கினார்

34

நான் இந்த கல்லூரியில் பயின்ற போதெல்லாம் இதுபோன்ற எந்தவித சம்பவமும் நடந்ததில்லை. கலாஷேத்ரா என்கிற பெயரை ஒழுங்காக கூட சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் இந்த கல்லூரியை பற்றி குறை சொல்வதை பார்க்கும் போது மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. எந்த ஒரு பாலியல் தொல்லை நடந்தாலும் அதைப்பற்றி அப்போதே பேச வேண்டும். இதேபோல் ஒருவர் ஏற்கனவே செய்திருக்கிறார் என கூறியிருந்தார். 

44

கலாஷேத்ரா கல்லூரிக்கு ஆதரவாக அபிராமி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதேபோல் அந்த பேட்டியில் பாடகி சின்மயியையும் அபிராமி மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசியிருந்ததால் கடுப்பான சின்மயி, அவரின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “உண்மையை அப்போதே சொன்னாலும் தாமதமாக சொன்னாலும் உண்மை உண்மை தான். நீங்க நம்புனாலும் நம்பாவிட்டாலும் உண்மை பொய்யாகிவிடாது” என பதிவிட்டிருந்தார். 

இதையும் படியுங்கள்... சூர்யா 42 படத்தின் டைட்டில் லீக் ஆனது.. ‘வி’ சென்டிமெண்டை கைவிட்டு கடவுள் பெயரை படத்திற்கு தலைப்பாக வைத்த சிவா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image2
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image3
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved