- Home
- Cinema
- மோடியும், ஸ்டாலினும் ‘வாவ்’ என வியந்து பாராட்டிய செஸ் ஒலிம்பியாட் துவக்கவிழா வெற்றியடைய காரணம் இந்த இயக்குனரா?
மோடியும், ஸ்டாலினும் ‘வாவ்’ என வியந்து பாராட்டிய செஸ் ஒலிம்பியாட் துவக்கவிழா வெற்றியடைய காரணம் இந்த இயக்குனரா?
செஸ் ஒலிம்பியாட் துவக்கவிழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி முதல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை அனைவரும் வியந்து பாராட்டிய விஷயம் என்றால் குறுகிய நாட்களில் இவ்வளவு பிரம்மாண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது பற்றி தான்.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. பிரதமர் மோடி கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதன்முறை. அதுவும் தமிழ்நாட்டில் நடத்தப்படுவதனால், இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மிக பிரம்மாண்டமாக செய்திருந்தது.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்தே அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. முதலில் இதனை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள புகழ்பெற்ற நேப்பியர் பாலத்தை செஸ் போர்டை போல் கருப்பு, வெள்ளை நிறங்களில் வர்ணம் பூசி ஆச்சர்யப்படுத்தினர்.
இந்த வித்தியாசமான முயற்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கான பாடலும், அதனை இயக்குனர் விக்னேஷ் சிவன் படமாக்கிய விதமும் மக்களை வெகுவாக கவர்ந்தது. இதையெல்லாம் மிஞ்சும் வகையில் நேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதையும் படியுங்கள்...தம்மாதூண்டு உடையணிந்து வெளிநாட்டில் கிளாமர் குயினாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்
இதில் கலந்துகொண்ட பாரத பிரதமர் மோடி முதல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை அனைவரும் வியந்து பாராட்டிய விஷயம் என்றால் குறுகிய நாட்களில் இவ்வளவு பிரம்மாண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது பற்றி தான். இந்த தொடக்க விழாவை சக்சஸ்புல்லாக நடத்தியவர் யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்திக்காட்டியது இயக்குனர் விக்னேஷ் சிவன் தான். இவர் தான் இந்த விழாவை இயக்கினார். இந்த விழா குறுகிய காலத்தில் இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்தி முடிக்க முக்கிய காரணம் அரசு அதிகாரிகள் தான் என்றும், அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமானது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த விழாவை 10 நாட்களில் திட்டமிட்டு செய்து முடித்ததாக விக்னேஷ் சிவன் கூறினார்.
இதையும் படியுங்கள்... நயன்தாரா வெடிங் ஸ்டைலை... காபி அடித்த கீர்த்தி சுரேஷ்! சும்மா தங்க சிலை மாதிரி ஜொலிக்கும் போட்டோஸ்..!