நயன்தாரா வெடிங் ஸ்டைலை... காபி அடித்த கீர்த்தி சுரேஷ்! சும்மா தங்க சிலை மாதிரி ஜொலிக்கும் போட்டோஸ்..!
நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் ட்ரேடிஷ்னல் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக தெலுங்கில் வெளியான 'சர்காரி வாரி பட்டா' திரைப்படம், மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இவரது கை வசமும் தற்போது 3 தெலுங்கு படங்கள் மட்டுமே உள்ளது. தமிழ், மற்றும் மலையாளத்தில் ஒரு படம் கூட இன்னும் கமிட் ஆகாமல் உள்ளார்.
பாலிவுட் பட வாய்ப்பு தேடி வந்த போது, ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைத்திருந்த கீர்த்தி சுரேஷ், தற்போது மீண்டும் கொஞ்சம் புசு புசு அழகிற்கு மாறியுள்ளார் என்பது அவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்தாலே தெரிகிறது.
மேலும் செய்திகள்: அட தனுஷுக்கு இப்படி ஒரு அபார திறமையா? ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்த வீடியோ!
பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் தீவிர ஆர்வம் காட்டி வரும் கீர்த்தி சுரேஷ்... கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று கூறி வந்த கட்டுப்பாட்டை தகர்த்து, தன் உடல் அழகை எடுப்பாக காட்டும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சில படு வைரலாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டது.
இதை தொடர்ந்து தற்போது நயன்தாரா வெடிங் ஸ்டைலில்... ஆபரணம் மற்றும் சிவப்பு நிற பட்டு புடவையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களில் கொள்ளை அழகில் ஜொலிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதில் நயன்தாரா அவரது திருமணத்திற்கு அணிந்திருந்த நகைகள் போலவே கீர்த்தி சுரேஷ் அணிந்துள்ளார். சேலை கூட சிவப்பு நிறத்தில் அணிந்துள்ளதால்... நயன்தாரா வெட்டிங் ஸ்டைலில் கீர்த்தி போட்டோ ஷூட் செய்துள்ளாரா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்: சண்டை காட்சியில் விழுந்து வாரி விபத்திற்குள்ளான நடிகை சம்யுக்தா ஹெக்டே..!