அட தனுஷுக்கு இப்படி ஒரு அபார திறமையா? ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்த வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், இன்று தன்னுடைய 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் பிரபலங்கள் மற்றும் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், நடிகர் பிரசன்னா தனுஷின் அபார திறமையை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 

dhanush play music piano  video goes viral

தனுஷ் பல்வேறு விமர்சனங்களோடு திரையுலகில் அடியெடுத்து வைத்தாலும், இன்று கோலிவுட் திரையுலகை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் என பல முன்னணி நடிகர்கள் எட்ட முடியாத சிகரத்தை தொட்ட நடிகராக மாறியுள்ளார். அது மட்டும் இன்றி சக்ஸர்ஸ் ஃபுல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இப்படி பல்வேறு திறமைகளோடு இருக்கும் தனுஷ் பியானோ வாசிப்பதிலும் கில்லாடி என்பதை நிரூபித்துள்ளது தற்போது நடிகர் பிரசன்னா வெளியிட்டுள்ள வீடியோ.

dhanush play music piano  video goes viral

தனுஷ் பியானோ வாசிக்கும் வீடியோவை நடிகர் பிரசன்னா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து தனுஷின் ரசிகர்கள், தனுஷுக்குள் இப்படி ஒரு அபார திறமையும் ஒளிந்துள்ளதா? என ஆச்சர்யத்துடன் பார்த்து வருவது மட்டும் இன்றி அவருக்கு தங்களின் வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.

dhanush play music piano  video goes viral

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இருந்து நேற்றே 3 ஆவது சிங்கிள் பாடலான 'லைப் ஆப் பழம்' பாடல் வெளியான நிலையில், இன்று மாலை 6 மணிக்கு, இவர் நடித்துள்ள 'வாத்தி' படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios