சண்டை காட்சியில் விழுந்து வாரி விபத்திற்குள்ளான நடிகை சம்யுக்தா ஹெக்டே..!
நடிகை சம்யுக்தா ஹெக்டே 'க்ரீம்' படத்தின் படப்பிடிப்பின் போது சண்டை காட்சியில் நடித்து கொண்டிருந்தபோது காயமடைந்ததாக கூறப்படுகிறது.

தமிழில், பப்பி, கோமாளி, போன்ற பல படங்களில் நடித்துள்ளவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் தற்போது இயக்குனர் அபிஷேக் பசந்த் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் கிரீம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆக்க்ஷன் காட்சிகளிலும் இவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி எடுக்கப்பட்ட ஒரு சண்டைக் காட்சியின் போது எதிர்பாராமல் கீழே விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீப காலமாக நடிகர், நடிகைகள் ஆக்ஷன் மற்றும் ரிஸ்க் எடுத்து நடிக்க வேண்டிய காட்சிகளில் கூட, டூப் போடாமல் அவர்களே முழு ஈடுபாடுடன் நடித்து வரும் நிலையில், இந்த சண்டை காட்சியில் சம்யுக்தா ஹெக்டே... நடித்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உடனடியாக நடிகையை, படக்குழு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் செய்திகள்: என் மகன் அதிகம் கஷ்டப்பட்டுருக்கான்... அசிங்கப்பட்டிருக்கான்..! தனுஷ் பற்றி பேசி மேடையில் கலங்கிய கஸ்தூரி ராஜா
இந்த விபத்தில் சம்யுக்தாவிற்கு... முழங்காலில் தசை பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக மருத்துவர்கள் தற்போது சிகிச்சை அளித்துள்ளதாகவும், சில நாட்கள் ஓய்வுக்கு பின்னரே படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்டுகிறது. மேலும் இவரது காலில் அடிபட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: என் மகன் அதிகம் கஷ்டப்பட்டுருக்கான்... அசிங்கப்பட்டிருக்கான்..! தனுஷ் பற்றி பேசி மேடையில் கலங்கிய கஸ்தூரி ராஜா
சோஷியல் த்ரில்லர் படமான க்ரீம் படத்தை அறிமுக இயக்குனர் அபிஷேக் பசந்த் இயக்கி வருகிறார் சம்யுக்தா இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எதிர்மறையான கதாபாத்திரத்தில் இவர் நடிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்னி ஸ்ரீதர் இந்த படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: விஜய் சேதுபதி வாழ்க்கையில் வந்த ரியல் ஜானு..! பிளாஷ்பேக் பள்ளி காதலை முதல் முறையாக கூறி உருக்கம்!