- Home
- Cinema
- என் மகன் அதிகம் கஷ்டப்பட்டுருக்கான்... அசிங்கப்பட்டிருக்கான்..! தனுஷ் பற்றி பேசி மேடையில் கலங்கிய கஸ்தூரி ராஜா
என் மகன் அதிகம் கஷ்டப்பட்டுருக்கான்... அசிங்கப்பட்டிருக்கான்..! தனுஷ் பற்றி பேசி மேடையில் கலங்கிய கஸ்தூரி ராஜா
நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானபோது, பட்ட கஷ்டங்கள் பற்றி... மேடை ஒன்றில் பேசி கலங்கியுள்ளார் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா.

நடிகர் தனுஷ் திரையுலக பின்புலம் இருந்தாலும், பல்வேறு காரணங்களுக்காக ஒதுக்கப்பட்டு, நசுக்கப்பட்ட பிறகே தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பால் இன்று ஹாலிவுட் திரையுலகில் கூட நடித்த முதல் தமிழ் நடிகர் என்கிற அடையாளத்தை தனதாக்கி கொண்டுள்ளார்.
இவர் திரையுலகில் அறிமுகமான காலங்களில், பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது அனைவரும் அறிந்தது தான். இந்நிலையில் இது குறித்து, தனுஷின் தந்தை பேசிய... பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் , தனுஷ் ரசிகர்களால் வைரலாக்க பட்டு வருகிறது. அந்த வீடியோவில்... தன்னுடைய மகன் தனுஷ் குறித்தும், அவர் பட்ட கஷ்டங்கள் பற்றியும் பேசி மனம் கலங்கியுள்ளார் கஸ்தூரி ராஜா.
மேலும் செய்திகள்: தனுஷின் பிறந்தநாளில்... சமூக வலைத்தளத்தை தெறிக்கவிடும் 'Life of Pazham' singile பாடல்!
இந்த வீடியோவின் துவக்கத்திலேயே... என் மகன் என்னை விட மிகவும் கஷ்டப்பட்டுள்ளான். நான் பெரிதாக சினிமாவில் கஷ்டப்படவில்லை ஆனால் அவன் பட்டது அதிகம். தனுஷ் நடித்த 'துள்ளுவதோ இளமை' படத்தை அப்பா - மகன் பார்த்து விட்டு, இந்த படத்தை வாங்கி வெளியிட வேண்டும் என மகன் கூறினார், ஆனால் அவரது தந்தை வாங்க எதிர்ப்பு தெரிவித்தார். இந்த பிரச்சனை எங்கள் அலுவலத்தில் மட்டும் அல்லாமல் வெளியிலும் நடந்தது.
எனவே நான் இந்த படத்தை பிரபல விநியோகஸ்தர் ஒருவருக்கு பிரத்தேயகமாக போட்டு காட்டினேன். படம் முடிந்த பிறகு எல்லோரும் இருந்தனர் அவரை மட்டும் காணவில்லை. பின்னர் போன் செய்து கேட்டதற்கு. நம்ப பையன் படம் நடிச்ச நம்ப கண்ணுக்கு அழகாத்தான் தெரிவான். ஆனால் காசு கொடுத்து படம் பார்ப்பவர்களுக்கு அழகா தெரியணும் இல்ல என கூறி அசிங்கப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்: உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலா பட நடிகர்..! வெளியான அதிர்ச்சி புகைப்படம்!
இப்படி பல்வேறு விமர்சனங்கள், கஷ்டங்களை தாண்டிய பிறகே தனுஷ் இந்த நிலைக்கு வந்துள்ளார். இதே போல் ஆரம்ப காலத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான பிறகே நடிகர் விஜய் கூட இன்று முன்னணி நடிகர் என்கிற இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் வரும் சோதனைகளையும், வலிகளையும் கண்டு பயந்து ஓடாமல் நின்று போராடினால் வெற்றி என்பது தன்வசப்படும் என்பதற்கு தனுஷ் - விஜய் மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
மேலும் செய்திகள்: விஜய் சேதுபதி வாழ்க்கையில் வந்த ரியல் ஜானு..! பிளாஷ்பேக் பள்ளி காதலை முதல் முறையாக கூறி உருக்கம்!