தனுஷின் பிறந்தநாளில்... சமூக வலைத்தளத்தை தெறிக்கவிடும் 'Life of Pazham' சிங்கிள் பாடல்!
நடிகர் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம்பெற்றுள்ள லைஃப் ஆப் பழம் பாடல் நேற்று வெளியான நிலையில், இந்தப் பாடலை தனுஷின் பிறந்தநாள் ஆன இன்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில், தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்' தொடர்ந்து வித்யாசமான கதைகளை இயக்கி, வெற்றி படங்களை கொடுத்து வரும் மித்ரன் ஜவகர் தற்போது தனுஷை வைத்து எதார்த்தமான கதையை படமாக்கி உள்ளது இதுவரை வெளியான இந்த படத்தின் தகவல்கள் மூலம் தெரிகிறது. ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்றிருந்த, தா'ய் கிழவி', 'மேகம் கருக்காத' ஆகிய இரண்டு பாடல்கள் தனுஷின் குரலில் அனிருத் இசையமைப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் படிக்க: விஜய் சேதுபதி வாழ்க்கையில் வந்த ரியல் ஜானு..! பிளாஷ்பேக் பள்ளி காதலை முதல் முறையாக கூறி உருக்கம்!
இதைத் தொடர்ந்து தற்போது தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்றைய தினமே இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'லைஃப் ஆஃப் பழம்' பாடலை பட குழுவினர் வெளியிட்டனர். 'தங்கமகன்' படத்திற்கு பின்னர் 7 வருடங்களுக்கு பின்னர், தனுஷ் - அனிருத்தின் காம்போ இப்படத்தின் மூலம் இணைந்துள்ளதால், இதுவரை வெளியான அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க: அட கடவுளே... ஆரம்பிக்கும் முன்பே ரஜினியின் ஜெயிலர் படத்துக்கு இப்படி ஒரு தடங்கலா?
குறிப்பாக தனுஷின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்தப் பாடலை தனுஷின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் படு வைரலாகி வருகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக இப்படத்தில் ராசி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பாரதிராஜா பிரகாஷ்ராஜ் ஆகிய பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.