- Home
- Cinema
- தம்மாதூண்டு உடையணிந்து வெளிநாட்டில் கிளாமர் குயினாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்
தம்மாதூண்டு உடையணிந்து வெளிநாட்டில் கிளாமர் குயினாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்
Aishwarya Rajesh : கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது நடிகைகள் ஜனனி மற்றும் சம்யுக்தாவுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சினிமாவுக்குள் நுழைந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பா.இரஞ்சித்தின் அட்டக்கத்தி, விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும், மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தொடர்ந்து செக்க சிவந்த வானம், வட சென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, க பெ ரணசிங்கம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ் தவிர தெலுங்கு, மாலையாளம் போன்ற தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கைவசம் அரைடஜன் படங்கள் உள்ளன. அதன்படி டிரைவர் ஜமுனா, விஷ்ணு விஷால் ஜோடியாக கோகன் தாஸ், கண்ணன் இயக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்...உதயநிதி ரிலீஸ் செய்த சந்தானத்தின் குலுகுலு திரைப்படம் பாதியில் நிறுத்தம் - என்ன பிரச்சனை தெரியுமா?
இவ்வாறு கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இதுவரை பெரும்பாலும் ஹோம்லி வேடங்களில் தான் நடித்துள்ளார். இந்த நிலையில், சமீபகாலமாக இவர் கிளாமராக போட்டோஷூட் நடத்தி வருகிறார். அவர் கிளாமர் வேடங்களில் நடிக்க தயாராக இருப்பதை தெரிவிக்கவே இவ்வாறு போட்டோஷூட் நடத்தி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். முதலாவதாக பாரிஸ் சென்ற அவர் அங்குள்ள ஈஃபிள் டவர் முன் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்துள்ளார். குறிப்பாக குட்டையான உடை அணிந்து தொடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்கள் செம்ம வைரல் ஆகி வருகின்றன. நடிகைகள் ஜனனி மற்றும் சம்யுக்தாவும் ஐஸ்வர்யாவுடன் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...விபச்சார கேஸில் பிடிபட்ட நடிகை மீண்டும் போலீசில் சிக்கினார்.. சினிமா பாணியில் சேஸிங் செய்து கைது பண்ணிய போலீஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.