- Home
- Cinema
- விபச்சார கேஸில் பிடிபட்ட நடிகை மீண்டும் போலீசில் சிக்கினார்.. சினிமா பாணியில் சேஸிங் செய்து கைது பண்ணிய போலீஸ்
விபச்சார கேஸில் பிடிபட்ட நடிகை மீண்டும் போலீசில் சிக்கினார்.. சினிமா பாணியில் சேஸிங் செய்து கைது பண்ணிய போலீஸ்
மலையாள படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பிரபலமான நடிகை ஒருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள நடிகையான அஸ்வதி பாபு, சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். குறிப்பாக சின்னத்திரையில் பேமஸான நடிகையாக வலம் வந்த இவர், பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். அதில் ஒன்று தான் விபச்சார கேஸ். இளம் பெண்களை போதைக்கு அடிமையாக்கி, அவர்களை வைத்து அப்பார்ட்மெண்ட் ஒன்றில் விபச்சாரம் நடத்தி வந்ததாக கடந்த 2018-ம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார் அஸ்வதி.
இதையடுத்து ஜாமினில் வெளியே வந்த இவர், தற்போது மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அதற்கு காரணம் குடி போதையில் கார் ஓட்டியது தான். நடிகை அஸ்வதி தனது காதலன் நவுபல் உடன் குடி போதையில் காரில் சென்றுள்ளார். அப்போது இருவரும் அதிவேகமாக காரை ஓட்டியதாக கூறப்படுகிறது.
கொச்சி குசாட் சந்திப்பில் சென்றபோது அருகில் இருந்த தடுப்புச்சுவர் மீதும், சாலையோரம் சென்று கொண்டிருந்த பைக் மற்றும் கார் மீதும் உரசியபடி அவர்கள் சென்ற கார் தரிகெட்டு ஓடி உள்ளது. இதைப் பார்த்து பதறிப்போன அப்பகுதி மக்கள், இவர்களால் வேறுயாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு, அஸ்வதி சென்ற காரை விரட்டிச் சென்றுள்ளனர்.
இதையும் படியுங்கள்.... மனசுல விஷ்ணு விஷால்னு நெனப்பா?... பெட்ரூமில் நிர்வாண போஸ் கொடுத்த விஜய் டிவி பிரபலத்தை விளாசும் நெட்டிசன்கள்
சினிமா பாணியில் நடந்த இந்த சேஸிங்கின் இறுதியில் அஸ்வதியின் காரை மடக்கிப் பிடித்துள்ளனர். அப்போது தப்பித்து செல்ல முயன்றபோது அருகில் இருந்த கல் ஒன்றில் ஏறியதால் அவர்களது கார் டயர் வெடித்து சிதறி உள்ளது. இதனால் எங்கும் தப்பிக்க முடியாமல் இருவரும் வசமாக சிக்கி உள்ளனர்.
பின்னர் காரில் இருந்து இறங்கி ஓடிய அவர்கள் இருவரும் ஒரு துணிக்கடைக்குள் சென்று பதுங்கிக் கொண்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் இருவரும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது உறுதியானதால் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பபம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்.... ஐஸ்வர்யா ராய் முதல் ரேகா வரை...நெருங்கமான காட்சிகளில் வசதியாக உணர்ந்த நடிகைகள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.