- Home
- Cinema
- மனசுல விஷ்ணு விஷால்னு நெனப்பா?... பெட்ரூமில் நிர்வாண போஸ் கொடுத்த விஜய் டிவி பிரபலத்தை விளாசும் நெட்டிசன்கள்
மனசுல விஷ்ணு விஷால்னு நெனப்பா?... பெட்ரூமில் நிர்வாண போஸ் கொடுத்த விஜய் டிவி பிரபலத்தை விளாசும் நெட்டிசன்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேமஸான நகைச்சுவை நடிகர் ஒருவர் நிர்வாண டிரெண்டில் இணைந்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிர்வாணமாக போஸ் கொடுத்து போடோஷூட் ஒன்றை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் இந்த போட்டோஷுட் படு வைரலானது. இதனால் அவருக்கு எதிர்ப்புகளும் கிளம்பியது. குறிப்பாக அவருக்கு எதிராக மும்பை போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது.
ரன்வீர் சிங் நிர்வாண புகைப்பட சர்ச்சை முடிவதற்குள் பிரபல தமிழ் நடிகரான விஷ்ணு விஷால், பெட்ரூமில் நிர்வாணமாக படுத்தபடி போஸ் கொடுத்து அதிர்ச்சி கொடுத்தார். மேலும் இந்த புகைப்படங்களை தனது மனைவி ஜுவாலா கட்டா தான் எடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக இவ்வாறு போஸ் கொடுத்ததாக விஷ்ணு விஷால் தெரிவித்திருந்தார். இவருக்கும் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்த நிலையில், தற்போது இந்த நிர்வாண டிரெண்டில் மேலும் ஒரு பிரபலம் இணைந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேமஸான சரத், விஷ்ணு விஷாலைப் போல் பெட்ரூமில் படுத்தபடி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... அட தனுஷுக்கு இப்படி ஒரு அபார திறமையா? ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்த வீடியோ!
இன்ஸ்டாகிராமில் அவர் இந்த புகைப்படத்தை பதிவிட்டதை பார்த்த ரசிகர்கள் முதலில் அவருக்கு உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என நினைத்து விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டு வந்தனர். பின்னர் தான் அவர் நிர்வாண சேலஞ்சிற்காக இவ்வாறு போட்டோ பதிவிட்டது தெரியவந்தது.
அவரின் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சிலர் மனசுல விஷ்ணு விஷால்னு நெனப்பா என கேள்வி எழுப்பி வருவதோடு, இந்த போட்டோவை டெலிட் செய்யுமாறும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த போட்டோவை குக் வித் கோமாளில் பிரபலம் பாலா தான் எடுத்ததாக சரத் தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
இதையும் படியுங்கள்... படிப்பை பிரசாதம் மாதிரி கொடுங்க... 'வாத்தி' டீசரில் பாரதியார் கெட்டப்பில் மாஸ் காட்டிய தனுஷ்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.