இதுவே முதல் முறை...! நயன்தாராவுக்காக விக்கி இப்படி இறங்கிட்டாரே பாஸ்..! வைரல் போஸ்ட்..
இரண்டாவது ஹனி மூன் கொண்டாடி வந்த கையேடு மீண்டும் பட வேளைகளில் பிஸியாகியுள்ளனர் நயன்தாரா விக்கி ஜோடி. இதை தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள ஸ்டேட்டஸ் வீடியோ ஒன்று, வைரல் ஆகி வருகிறது.
6 வருடங்கள் உருக உருக காதலித்து திருமண பந்தத்தில் இணைந்துள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, கணவன் மனைவி பந்தத்தை அனுபவித்து வருகிறார்கள். பட வேலைகள் இல்லாத போது, தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள, திருமணத்திற்கு முன்பு டேட்டிங் சென்ற இந்த ஜோடி... தற்போது ஹனி மூனுக்கு பறக்கிறது.
அந்த வகையில் திருமணம் முடிந்த கையேடு, முதல் ஹனி மூனுக்கு தாய்லாந்து நாட்டிற்கு சென்ற இவர்கள், அதன் பின்... சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று, படு ஜோராக தங்களின் இரண்டாவது ஹனி மூன் நாட்களை கழித்து விட்டு, கடந்த வாரம் தான் இந்தியா வந்து சேர்ந்தனர்.
மேலும் செய்திகள்: ஒற்றை பாடலுக்கு குத்தாட்டம் போடா அதிக சம்பளம் வாங்கிய டாப் 5 நடிகைகள்? முழு விவரம் இதோ.!
இப்படி வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம், அங்கு எடுத்த விதவிதமான ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு சிக்கிள்ஸை ஜெலஸ் ஆக்கி வந்த விக்கி மீண்டும் பட வேலைகளிலும், மற்ற சில விஷயங்களிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
நயன்தாராவை திருமணம் செய்வதற்கு முன்பு திரைப்படங்கள் மட்டுமே இயக்கி வந்த விக்னேஷ் சிவன், திருமணத்திற்கு பின், பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருவதை பார்க்க முடிகிறது. ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய விக்கி, தற்போது... நயன்தாராவுக்காக விளம்பர படங்களையும் இயக்கியுள்ளார்.
மேலும் செய்திகள்: அடேங்கப்பா... குத்தாட்டத்தில் சாண்டிக்கே செம்ம டஃப் கொடுத்த அதிதி ஷங்கர்! வைரலாகும் வீடியோ..!
காதல் மனைவி நயன்தாரா நடித்துள்ள பிரபல பிராண்டின் விளம்பர படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கி உள்ளார். இதுகுறித்த, விளம்பர பலகையை காரில் சென்று கொண்டிருக்கும் போது , எடுத்து வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன் 'இதுதான் என் முதல் டிவி விளம்பரம்' என தெரிவித்து இருக்கிறார்.
இதை பார்த்து ரசிகர்கள் முன்னனி நடிகர்களை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தும், நயன்தாராவுக்காக விளம்பர படம் இயக்கும் அளவுக்கு வந்து விட்டாரே என கூறி வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: அடேங்கப்பா... குத்தாட்டத்தில் சாண்டிக்கே செம்ம டஃப் கொடுத்த அதிதி ஷங்கர்! வைரலாகும் வீடியோ..!