அடேங்கப்பா... குத்தாட்டத்தில் சாண்டிக்கே செம்ம டஃப் கொடுத்த அதிதி ஷங்கர்! வைரலாகும் வீடியோ..!
நடிகை அதிதி ஷங்கர், விருமன் படப்பிடிப்பு தளத்தில் சாண்டி மாஸ்டருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மருத்துவ படிப்பை முடித்த கையேடு, திடீர் என திரைப்படத்தில் அறிமுகமாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த, பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கைப்பற்றி தற்போது நடிப்பில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில், நடிகர் கார்த்தி 'கொம்பன்' படத்திற்கு பின்னர் இரண்டாவது முறையாக இவர் இயக்கத்தில் நடித்த 'விருமன்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதுவரை வெளியான கதையை தான் மீண்டும் இயக்கி உள்ளதாக சில விமர்சனங்கள் இந்த படத்திற்கு கிடைத்தாலும், எடுக்கப்பட்ட விதம், சுவாரஸ்யமாக இருந்ததால், இந்த படம், சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
மேலும் இந்த படத்தை தயாரித்த சூர்யாவுக்கும் லாபத்தை பெற்று தந்தது. முதல் படத்திலேயே அதிதி வெற்றிப்பட ஹீரோயினாக அறியப்பட்டு விட்டதால் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் ககுவிந்து வருகிறது. எனினும், தொடர்ந்து தரமான கதைகளையே தேர்வு செய்து நடிப்பதிலும், கவர்ச்சியான வேடங்களில் நடிக்க கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளார் அதிதி.
'விருமன்' படத்தை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக... 'மாவீரன்' படத்தில் நடித்து வரும் இவர், தற்போது சாண்டி மாஸ்டருடன் செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை அவரே வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 'விருமன்' படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், அதிதி பாவாடை தாவணியில் உள்ளார். குத்தாட்டத்தில் சாண்டி மாஸ்டருக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் ஆட்டம் போட்ட இவரது நடத்தை பார்த்து விட்டு சாண்டி கை தட்டி உற்சாகப்படுத்தியுள்ளார்.
அந்த வீடியோ இதோ...