- Home
- Cinema
- Chhaava OTT: விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியான 'சாவா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Chhaava OTT: விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியான 'சாவா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த 'சாவா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சாவா திரைப்படம்:
சத்ரபதி சிவாஜியின் மகனான ஷாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக, உருவான திரைப்படம் 'சாவா'. விக்கி கௌஷல் ஹீரோவாகவும், ராஷ்மிகா கதாநாயகியாகவும் நடித்திருந்த இந்த படம், பிப்ரவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பாலிவுட் திரையுலக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சாவா படத்தின் வசூல்:
சுமார் ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், முதல் நாளிலேயே வெற்றியை உறுதி செய்யும் விதமாக வசூலில் கலக்கியது. தற்போது வரை இப்படம், ரூ. 500 கோடியில் இருந்து ரூ. 800 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதே போல் இந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி அதிக வசூல் செய்த படங்களில் சாவா தான் முதலிடத்தில் உள்ளது.
Pushpa 2 Vs Chhaava: புஷ்பா 2 வசூலை முறியடித்த சாவா! எங்கு தெரியுமா?
ஆவலோடு காத்திருந்த ரசிகர்கள்:
அதுமட்டுமின்றி விக்கி கௌஷல் திரைப்படங்களில், முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக சாவா சாதனை படைத்துள்ளது. இந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் திரையரங்கில் பார்க்க தவறிய ரசிகர்கள் பலர், எப்போது ஓடிடியில் 'சாவா' ரிலீஸ் ஆகும் என காத்திருந்தனர். அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாகவே தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 11 ஆம் தேதி ரிலீஸ்:
அதன்படி பாலிவுட் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்களின்படி, இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் அதிக விலைக்கு வாங்கியுள்ளதாகவும். இதனால் இந்த படம் Netflix-ஸில் அனைத்து மொழிகளிலும் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் கோட் பட வசூல் சாதனையை முறியடித்த ராஷ்மிகா மந்தனாவின் சாவா!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.