MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Pushpa 2 Vs Chhaava: புஷ்பா 2 வசூலை முறியடித்த சாவா! எங்கு தெரியுமா?

Pushpa 2 Vs Chhaava: புஷ்பா 2 வசூலை முறியடித்த சாவா! எங்கு தெரியுமா?

ஹிந்தியில் வெளியான 'சாவா' பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்புகிறது. மகாராஷ்டிராவில் புஷ்பா 2 சாதனைகளை முறியடித்து விரைவில் 500 கோடி மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min read
Author : manimegalai a
Published : Mar 10 2025, 09:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சாவா புஷ்பா 2வை மகாராஷ்டிராவில் முந்தியது

சாவா புஷ்பா 2வை மகாராஷ்டிராவில் முந்தியது

சமீபத்தில் ஹிந்தியில் வெளியான 'சாவா' பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்துகிறது. வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகும் வசூல் குறையவில்லை.

சத்ரபதி சம்பாஜி மஹாராஜ் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்திற்கு வட இந்திய ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். வார இறுதி நாட்கள் மட்டுமின்றி தினமும் ரூ.20 முதல் ரூ.30 கோடி வரை வசூலித்து தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டித் தருகிறது. அதே நேரத்தில் புஷ்பா 2 சாதனைகளையும் முறியடித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சாவா புஷ்பா 2வை முந்தியது

சாவா புஷ்பா 2வை முந்தியது

மகாராஷ்டிராவில் சாவா திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. புஷ்பா 2 படத்தின் மொத்த வசூலை விட அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

15 நாட்களில் புஷ்பா 2 படத்தின் வசூலை முறியடித்தது சாதாரண விஷயம் அல்ல. புஷ்பா 2 திரைப்படம் மகாராஷ்டிராவில் 240 கோடி வசூல் செய்தது. ஆனால் சாவா திரைப்படம் 15 நாட்களில் 260 கோடி வசூல் செய்து அந்த சாதனையை முறியடித்துள்ளது.

சமீபத்தில் வரை மகாராஷ்டிராவில் புஷ்பா 2 தான் அதிக வசூல் செய்த திரைப்படம். ஆனால் தற்போது சாவா அந்த இடத்தை பிடித்துள்ளது. மகாராஷ்டிராவில் இதன் இறுதி வசூல் 300 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

34
விக்கி கௌஷல் ரசிகர்கள்

விக்கி கௌஷல் ரசிகர்கள்

உண்மையில் சாவா மற்றும் புஷ்பா 2 இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாக இருந்தன. டிசம்பர் 6ஆம் தேதியை குறி வைத்திருந்த சாவா திரைப்படம் புஷ்பா படத்திற்கு இருக்கும் வரவேற்பை பார்த்து வியர்த்ததாக கூறப்பட்டது.

எந்த திரைப்படத்தையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. புஷ்பா 2 போன்ற திரைப்படத்தை விட எங்கள் திரைப்படம் பெரியது என விக்கி கௌஷல் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

44
500 கோடி வசூலை எட்டும்

500 கோடி வசூலை எட்டும்

சாவா திரைப்படம் வெளியான மூன்றாவது சனிக்கிழமையில் அதிக வசூல் செய்த திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. இந்த திரைப்படம் விரைவில் 500 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்திற்கு பாலிவுட்டில் கிடைத்த வரவேற்பை பார்த்து சாவா திரைப்படத்தை தெலுங்கு ரசிகர்களுக்காக டப்பிங் செய்து கீதா ஆர்ட்ஸ் வெளியிட்டது. இந்த திரைப்படம் மார்ச் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

பாலிவுட்டில் மட்டும் 500 கோடி வசூல் செய்த இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்களை கவரவில்லை. வசூல் சுமாராகவே இருந்தது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சாவா
மகாராஷ்டிரா
அல்லு அர்ஜுன்
விக்கி கௌஷல்
அல்லு அர்ஜுன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அஜித் குமாரின் தாயார் மோகினி காலமானார்...! திரையுலக பிரபலங்கள் இரங்கல்
Recommended image2
அஜித் குடும்பத்தை உலுக்கிய துயரம்... தந்தையைத் தொடர்ந்து தாயையும் இழந்த நடிகர் அஜித் குமார்...
Recommended image3
Music: காதலர்களை மயக்கிய ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.! ரசிர்களை கட்டிப்போட்ட மெல்லிசை பிறந்த கதை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved