- Home
- Cinema
- Arasan : வெற்றிமாறன் பிறந்தநாள் அதுவுமா அரசன் படம் பற்றி புது குண்டை தூக்கிப்போட்ட சிம்பு - ஷாக் ஆன ரசிகர்கள்
Arasan : வெற்றிமாறன் பிறந்தநாள் அதுவுமா அரசன் படம் பற்றி புது குண்டை தூக்கிப்போட்ட சிம்பு - ஷாக் ஆன ரசிகர்கள்
Arasan Release Update : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் திரைப்படத்தில் நடித்து வரும் சிம்பு, அப்படத்தின் ரிலீஸ் குறித்து யாரும் எதிர்பார்க்காத அப்டேட்டை கொடுத்துள்ளார்.

Arasan Release Delayed
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி, அழுத்தமான கதைகளையும் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளையும் திரையில் கொண்டு வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘விடுதலை 2’ திரைப்படம் 2024ஆம் ஆண்டு இறுதியில் திரைக்கு வந்தது. அந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே, வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணி என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2027 பொங்கலுக்கு ‘அரசன்’ இல்லையா?
கடந்த 2025ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கிய ‘அரசன்’ படத்தின் ஷூட்டிங் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிலம்பரசன், படத்தின் ரிலீஸ் குறித்து முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகாது என வெற்றிமாறன் தன்னிடம் தெரிவித்ததாக கூறிய சிலம்பரசன், தனது ரசிகர்கள் நீண்ட காலமாக படத்திற்காக காத்திருப்பதால் அவர்களை மேலும் காத்திருக்க வைப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஒரு புதிய அப்டேட்டையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தீபாவளிக்கு வருகிறதா ‘The World of Arasan’?
‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, படத்தின் கதைக்களம் தொடர்பான சிறிய புரோமோ ஒன்று தயாரிக்கப்பட்டதாக சிலம்பரசன் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை ‘The World of Arasan’ என்ற பெயரில் 2026ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது படத்திற்கான சாதாரண அப்டேட் மட்டுமல்லாமல், பிரத்யேகமான படைப்பாக இருக்கும் என்றும், அதை ரசிகர்கள் பெரிய திரையில் பார்ப்பதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
60 சதவீத படப்பிடிப்பு நிறைவு?
‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு சுமார் 60 சதவீதம் வரை முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், வெற்றிமாறனின் பிரபலமான ‘வட சென்னை’ படத்தின் காலகட்டத்தை ஒட்டிய பின்னணியில் இந்தக் கதை உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ‘வட சென்னை’ படத்தின் உலகத்துடன் ‘அரசன்’ படத்திற்கு ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.
சிலம்பரசனுடன் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர். வெற்றிமாறனின் இயக்கம், சிலம்பரசனின் நடிப்பு, அனிருத்தின் இசை என வலுவான கூட்டணி அமைந்துள்ளதால், ‘அரசன்’ படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

